முடங்கியது புங்குடுதீவு: 3,945 பேர் சுய தனிமைப்படுத்தலில்!முடங்கியது புங்குடுதீவு: 3,945 பேர் சுய தனிமைப்படுத்தலில்!

யாழ்ப்பாணம் புங்குடுதீவு பகுதி முற்றாக முடக்கப்பட்டதுடன் இன்றும் 200 க்கும் மேற்பட்டோர் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

புங்குடுதீவு பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று இனங்காணப்பட்டதையடுத்து புங்குடுதீவு பகுதியில் இன்றுவரை (07) 1,212 குடும்பங்களைச் சேர்ந்த 3,945 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டிருந்தார்கள்.

அப்பகுதியில் இருந்து எவரும் வெளியேறாதவாறும் அப்பிரதேசத்துக்குள் எவரும் செல்லாதவாறு முடக்கப்பட்டுள்ளது.

hey