இந்தியாவில் ISIS அமைப்புடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் எட்டு பேரை அந்நாட்டு பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மும்பை, புனே, மகாராஷ்டிரா மற்றும் டெல்லியில் 19 இடங்களில் நடத்தப்பட்ட சிறப்பு நடவடிக்கையில் இந்த பயங்கரவாத குழு கைது செய்யப்பட்டுள்ளது.
இந்த நபர்கள் இந்தியா முழுவதும் பல குண்டுவெடிப்புகளை நடத்த தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது. சந்தேக நபர்களிடமிருந்து பயங்கரவாதத் தாக்குதல்களுக்கான திட்டங்கள் அடங்கிய ஆவணங்களையும் அந்நாட்டின் பாதுகாப்புப் படையினர் கண்டுபிடித்துள்ளனர்.
இந்தச் சுற்றிவளைப்பின் போது சந்தேகநபர்கள் வசம் இருந்த கூரிய ஆயுதங்கள், ஆயுதங்கள், டிஜிட்டல் சாதனங்கள் மற்றும் வெடிபொருட்களையும் பாதுகாப்புப் படையினர் கைப்பற்றியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.