- Advertisement -
- Advertisement -
தமிழர் தாயகத்தில் தொல்லியல் என்ற போர்வையிலான பண்பாட்டு அழிப்பையும் சிங்கள- பௌத்தமயமாக்கலையும் உடன் நிறுத்துமாறு கோரியும், வெடுக்குநாறிமலை ஆலயத்தில் நெடுங்கேணிப் பொலிஸாரால் திட்டமிட்டுக் கைது செய்யப்பட்டவர்களை உடன் விடுதலை செய்யுமாறு வலியுறுத்தியும் நாளையதினம்(19) யாழ்ப்பாணம் பல்கலைக்கழக முன்றலில் கவனயீர்ப்புப் போராட்டமொன்று இடம்பெறவுள்ளது.
யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இந்தக் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
தமிழர் தாயகம் மீதான திட்டமிட்ட தொல்லியல் ஆக்கிரமிப்புக்களுக்கு எதிராக யாழ்ப்பாணம் பல்கலைக்கழக சமூகமாக அணிதிரள்வோம் என்று மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
- Advertisement -