Wednesday, November 13, 2024

கிரிக்கெட் வரலாற்றில் மோசமான சாதனை பதிவு செய்த இலங்கை அணி!

- Advertisement -
- Advertisement -

கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக, துடுப்பாட்டத்தை தொடங்கும் நேரத்தைத் தாண்டி ஆட்டமிழந்த முதல் கிரிக்கெட் வீரர் என்ற மோசமான சாதனையை இலங்கை கிரிக்கெட் அணி வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் பெற்றுள்ளார்.

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில். பந்தை அடிக்க தாமதமாகி விட்டதாகவும், துடுப்பாட்டத்திற்கு வழங்கப்படும் 2 நிமிடம் முடிவடைந்தாக அறிவிக்கப்பட்டு அவர் ஆட்டமிழப்பு செய்யப்பட்டார்.

அவரின் தலைக்கவசத்தை அணிவதற்கு அதிக நேரம் எடுத்துக்கொண்டமையினால் இந்த ஆட்டமிழப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதாவது மத்தியூஸ் தூடுப்பாட வரும் போது ஹெல்மட்டின் ஸ்ட்ரைப் உடைந்து விடுகிறது.

முதல் பந்தை சந்திக்கும் முன்னே இரண்டு நிமிடங்கள் முடிந்து பங்களாதேஷ் சகீப் ஆட்டமிழப்பு கோருகிறார்.

நடுவரும் அவுட் கொடுத்து ஷாக் கொடுக்கிறார்.

கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக, துடுப்பாட்டத்தை தொடங்கும் நேரத்தைத் தாண்டி ஆட்டமிழந்த முதல் கிரிக்கெட் வீரராக ஏஞ்சலோ மேத்யூஸ் பதிவாகி உள்ளார். அதேவேளை ஜென்ட்டில்மேன் ஆட்டமான கிரிக்கட்டை பங்களாதேஷ் அணி கேவலப்படுத்தி விட்டதாக ரசிகர்கள் சமூக வலைகளில் கருத்து தெரிவித்து வருகின்றனர்

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular