- Advertisement -
- Advertisement -
தமிழ் சினிமாவில் சாக்லெட் பாயாக வலம் வந்தவர் தான் நடிகர் அப்பாஸ்.இவர் இயக்குனர் கதிர் இயக்கத்தில் 1996 -ம் ஆண்டு வெளியான காதல் தேசம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார்.முதல் படத்திலேயே இவருக்கு பல பெண் ரசிகர்கள் உருவாகினார்கள். இதையடுத்து பல படங்களில் ஹீரோவாகவும் மற்றும் முன்னணி நடிகர்கள் படங்களில் இரண்டாம் ஹீரோவாகவும் நடித்திருந்தார்.
கடைசியாக அப்பாஸ் மலையாளத்தில் 2015 -ம் ஆண்டு வெளியான பச்சகல்லம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.தற்போது அப்பாஸ் குடும்பத்துடன் நியூசிலாந்தில் செட்டில் ஆகியுள்ளார். அங்கு அவர் பைக் மெக்கானிக்காக வேலை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
- Advertisement -