விஜய்யும் வெங்கட்பிரபுவும் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது அதிகம் வைரலாகி வருகின்றது.நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர். இவரின் இயல்பான நடிப்பால் சிறியவர் முதல் பெரியவர் அனைவரையும் கவர்ந்தவர்.விஜய் எப்போதும் ஆடம்பரம் இல்லாத எளிமையான வாழ்க்கையை வாழ்பவர். அதனாலும் கூட அவருக்கு ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் உள்ளது. விஜய் நடிப்பில் கடைசியாக வாரிசு திரைப்படம் வெளியாகி சூப்பராக ஓடி அதிக வசூலைப் பெற்றிருந்தது. தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
அதுமட்டுமல்லாமல் விஜய்யின் 68ஆவது திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்கவுள்ளதாகவும், அதற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ளதாகவும் நேற்று அறிவிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில் விஜய்யும் வெங்கட் பிரபுவும் இணைந்து இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் அதிகம் வைரலாகி வருகின்றது.
அந்தப் புகைப்படத்தில் விஜய் அடையாளம் தெரியாத அளவிற்கு உடல் மெலிந்து, வெள்ளைத் தாடியுடன் மாறிப் போய் இருக்கிறார்.இந்தப் புகைப்படம் அண்மையில் எடுக்கப்பட்டதா? அல்லது சில ஆண்டுகளுக்கு முன்னதாக எடுக்கப்பட்டதா? என்று ரசிகர்கள் குழம்பிப் போய் இருக்கிறார்கள்.