கொழும்பில் அரச ஊழியர்களுக்காக 25 மாடி வீட்டு கட்டட தொகுதிகொழும்பில் அரச ஊழியர்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட வீட்டுத்தொகுதி திட்டத்தை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ திறந்து வைக்கவுள்ளார்.

5500 மில்லியன் ரூபா செலவில் பொரளை, வனாதமுல்லயில் நிர்மாணிக்கப்பட்ட ஓவல் வியு ரெசிடன்சி வீட்டுத் தொகுதி திறந்து வைக்கப்படவுள்ளது.

எதிர்வரும் 5ஆம் திகதி இந்த வீட்டுத் தொகுதி திறந்து வைக்கப்படவுள்ளதாக பிரதமர் செயலகம் அறிவித்துள்ளது.

முன் விற்பனை அடிப்படையில் நிர்மாணிக்கப்பட்ட இந்த வீட்டுத்தொகுதியில் 608 வீடுகள் உள்ளன. 3 படுக்கையறைகளை கொண்ட 304 வீடுகளும், 2 படுக்கையறைகளை கொண்ட 304 வீடுகளும் இதில் அடங்கும்.

வாகன நிறுத்துமிடம், சிறுவர் பூங்கா, 2 உடற்பயிற்சி நிலையங்ள், வர்த்தக தொகுதி, நீச்ச தடாகம் உட்பட பல்வேறு வசதிகளும் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

hey