வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத்தின் இணையத்தள அறிமுகம்வவுனியாவில்

வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத்தின் இணையத்தள அறிமுகம் சங்கத்தின் உபதலைவர் செல்லத்துரை சபாநாதன் தலைமையில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வு இன்று (20.09.2020) காலை 9.30 மணியளவில் புகையிரத நிலைய வீதியில் அமைந்துள்ள சுத்தானந்த இந்து இளைஞர் சங்க மண்டத்தில் நடைபெற்றிருந்தது.

கணபதி சித்தர் கலாபூஷணம் , சிவஸ்ரீ.மு.க.கந்தசாமிக்குருக்கள் இணைந்து இணையத்தளத்தினை அறிமுகம் செய்து வைத்தனர்.

இந் நிகழ்வின் முதன்மை விருந்தினராக சிவஸ்ரீ.மு.க.கந்தசாமிக்குருக்கள் கலந்து கொண்டிருந்ததுடன் சிறப்பு விருந்தினராக சிவஸ்ரீ மு.க கந்தகணேசதாஸன் குருக்கள் அவர்களும் விருந்தினர்களாக சங்கத்தின் உறுப்பினர்கள் , நலன் விரும்பிகள் , பொதுமக்கள் , அரச மற்றும் அரசார்பற்ற உத்தியோகத்தர்கள் , பாடசாலை மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

hey