வவுனியாவில் நேற்றையதினம் ஆலங்கட்டி மழை : பிரதேச செயலகம் வெளியிட்டுள்ள தகவல்வவுனியாவில்

வவுனியாவில் நேற்று (31.08) மாலை கடும் காற்றுடன் பெய்த ஆலங்கட்டி மழை காரணமாக 5 வீடுகள் முற்றாக சே தமடைந்துள்ளதுடன் 34 வீடுகள் பகுதியளவில் சே தமடைந்துள்ளதாக பிரதேச செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்று பிற்பகல் வவுனியா, கணேசபுரம் பகுதியில் பெய்த ஆலங்கட்டி மழையின் போது கடும் காற்று வீசியுள்ளது. இதனால் 39 வீடுகளின் கூரைகள் காற்றினால் தூ க்கி வீ சப்பட்டுள்ளதுடன், மழை நீர் வீடுகளுக்குள் புகுந்து மக்களின் உ டமைகளும் நா சமடைந்துள்ளன.

கணேசபுரம் பகுதியில் 5 வீடுகள் முற்றாக சே தமடைந்துள்ளதுடன் 32 பகுதியளவில் சே தமடைந்துள்ளது மேலும் சமயபுரம் பகுதியில் 2 வீடுகள் பகுதியளவில் மாத்திரம் சே தமடைந்துள்ளதாகவும் மொத்தமாக 39 வீடுகள் சே தமடைந்துள்ளதாக பிரசே செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த பகுதிக்கு விஐயம் மேற்கொண்ட அப்பகுதி கிராம சேவையாளர் நா.ஸ்ரீதரன் பா திக்கப்பட்ட மக்களின் விபரங்களை திரட்டியுள்ளதுடன் அவர்களுக்குரிய அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் நடவடிக்கையில் இறங்கியுள்ளார்.

hey