ம னநலம் பா திக்கப்பட்டவர்களை அவசரமாக மருத்துவமனையில் சேர்க்க புதிய திட்டம்!ம னநலம் பா திக்கப்பட்டவர்களை அவசரமாக மருத்துவமனையில் சேர்ப்பதற்காக, “1990-சுவசரிய” ஆம்புலன்ஸ் சேவையைப் பயன்படுத்த சுகாதார அமைச்சகம் ஒரு புதிய திட்டத்தை ஆரம்பித்துள்ளது.

இதன்படி, கொழும்பு மாவட்டத்தில் உள்ள சுவசரிய ஊழியர்கள் இந்த திட்டத்திற்கான பயிற்சியை ஏற்கனவே ஆரம்பித்துள்ளனர்.

இது குறித்து சுகாதார அமைச்சின் மேதிக செயலாளர் வைத்தியர் சுனில் டி அல்விஸ் கருத்து வெளியிடுகையில்,

“புதிய முறை நோ யாளிக்கு மிகத் துல்லியமான சி கிச்சையை வி ரைவாக வழங்கும், நோ யாளியின் உறவினர்கள் அல்லது பா துகாவலர்களுக்கு வசதியாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ம னநல நோ யாளிகளுக்கு சி கிச்சையளிப்பதற்கும் நோ யாளிகளின் போக்குவரத்திற்கும் ஒரு குறிப்பிட்ட நெறிமுறைகளில் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் இருக்கின்றது.

ஆகையினால், ம ருத்துவமனை அதிகாரிகள் மற்றும் ம னநல ம ருத்துவர்களுடன் கலந்தாலோசித்து ஒரு ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தை நாடு முழுவதும் கட்டம் கட்டமாக செயற்படுத்த சுகாதார அமைச்சகம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

hey