மரக்கறிகள் மற்றும் பத்திரிகைகளை ஏற்றும் வாகனமாக மாறிய வவுனியா தனியார் பேருந்து : பயணிகள் க டும் விசனம்வவுனியாவில்

வவுனியாவிலிருந்து மன்னார் நோக்கி பயணிக்கும் தனியார் பேரூந்தில் மரக்கறிகள் , பத்திரிகைகள் ஏற்றிச்செல்வதினால் பயணிகள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.

வவுனியாவிலிருந்து மன்னார் நோக்கி இன்று (27.08.2020) காலை 6.00 மணிக்கு புறப்பட்ட தனியார் பேருந்தின் பின்புறமாகவுள்ள அனைத்து ஆசனத்திலும் மரக்கறி மூடைகள் ,

பத்திரிகைகள் என்பன ஏற்றப்பட்டுள்ளமையினால் ஆசனங்கள் இன்றி முதியவர்கள் , பொதுமக்கள் நின்றபடியே தங்களது பிரயாணத்தினை தொடர்ந்தனர்.

வவுனியா மன்னார் தனியார் பேரூந்துகளில் கோழிகள் , மரக்கறிகள் , பத்திரிகைகள் இவ்வாறு ஏற்றிச் செல்லப்படுவது வழமையான சம்பவம் எனவும்

இவ்விடயம் தொடர்பில் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையினர் கவனம் செலுத்தி உரிய தீர்வினை பெற்றுத்தருமாறு பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

hey