வவுனியாவில் தி ருட்டு சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க தயாராகும் பொலிஸார் மற்றும் வர்த்தக சங்கத்தினர் : விரைவில் வவுனியா முழுவதும் சிசிடிவிவவுனியாவில்

வவுனியா நகரில் கடந்த சில நாட்களாக அதிகரித்து வரும் தி ருட்டு சம்பவம் தொடர்பில் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் திஸ்சலால் டி சில்வா அவர்களிடம் வவுனியா வர்த்தகர் சங்கத்தினர் விசேட கோரிக்கை ஒன்றினை முன்வைத்துள்ளனர்.

கண்டி வீதியில் அமைந்துள்ள சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் காரியாலயத்தில் வர்த்தகர் சங்கத்தினரும் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் திஸ்சலால் டி சில்வா அவர்களுக்குமிடையில் இடம்பெற்ற சந்திப்பிலேயே இவ்விடயம் தொடர்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது.

வவுனியா நகரில் இடம்பெறும் திருட்டுச்ச ம்பவங்களை த டுப்பதற்கு பொலிஸார் ஒத்துழைப்புக்களை தரவேண்டும். குறிப்பாக இரவு நேரங்களில் நடமாடும் பொ லிஸாரினை சேவையில் ஈடுபடுத்தி ச ந்தே கத்திற்கிடமாக செல்லும் வாகனங்களை பரிசோ தனைக்குட்படுத்த வேண்டும் அத்துடன் சிசிரிவி பொருத்தும் எமது செயற்பாட்டிற்கு ஒத்துழைப்புக்களையும் தருமாறு வர்த்தகர் சங்கத்தினால் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

அதன் பிரகாரம் இரவு நேரங்களில் நடமாடும் பொலிஸாரினை அதிகளவில் சேவையில் ஈடுபடுத்துவதாகவும் சிசிரிவி பொருத்தும் வர்த்தகர் சங்கத்தின் செயற்பாட்டிற்கு பூரண ஆதரவினை வழங்குவதாகவும் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் திஸ்சலால் டி சில்வா உத்தரவாதம் அளித்திருந்தார்.

வவுனியா நகரில் கடந்த 5 நாட்களுக்குள் மாத்திரம் நான்கு கடைகள் உ டைக்கப்பட்டு பொருட்கள் தி ருப்பட்ட சம்பவங்கள் இடம்பெற்றிருந்தமையுடன் இதுவரையில் எவரும் கை து செய்யப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

hey