13 வயதுக்கு குறைந்த சிறுவர்களை தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பயன்படுத்துவதற்குத் தடை!சிறுவர்களை

13 வயதுக்கு குறைந்த சிறுவர்களை தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பயன்படுத்துவதற்குத் த டைவிதிக்கும் வர்த்தமானி அறிவித்தல் எதிர்காலத்தில் வெளியிடப்படும் என்று தேசிய சிறுவர் பா துகாப்பு அதிகாரசபையின் தலைவர் பேராசிரியர் முதித விதானபத்திரன தெரிவித்துள்ளார்.

விளம்பரத்திற்கு கீழே செய்திகள் தொடரும்

அத்துடன் சிறுவர்களைத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், விளம்பரங்கள், ஒலிப்பதிவு போன்றவற்றுக்காகப் பயன்படுத்தும்போது பின்பற்றப்பட வேண்டிய வலுவான நெறிமுறைகளை அறிமுகப்படுத்துவதற்கும் தேசிய சிறுவர் பா துகாப்பு அதிகார சபை தீர்மானித்துள்ளது.

அனைத்துத் தொலைக்காட்சி நிறுவனங்களும் அந்த நெறிமுறைகளைப் பின்பற்றுவது அவசியம் என்பதுடன், அதிலிருந்து தவறும் பட்சத்தில் அவற்றுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் சிறுவர்களைப் பயன்படுத்துவதுடன் தொடர்புடைய துஷ்பிரயோகங்கள் குறித்த சில முறைப்பாடுகள் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்குக் கிடைக்கப்பெற்றிருக்கின்றன.

இதனையடுத்து இவ்விடயம் தொடர்பில் ஊடக அமைச்சுடன் தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாகவும், மேற்படி நெறிமுறைகள் தயாரிக்கும் பணி அதன் இ றுதிக்கட்டத்தை எட்டியிருப்பதாகவும் பேராசிரியர் முதித விதானபத்திரன தெரிவித்திருக்கிறார்.

மேலும் 3 வயதுக்கு குறைவான குழந்தைகளை விளம்பரங்களுக்காகப் பயன்படுத்துவதற்கு அனுமதியளிக்கும் சட்டத்தில் தி ருத்தங்களை ஏற்படுத்துவதற்கும், சர்வதேச நியமங்களுக்கமைவாக வயதின் வரையறையை 13 ஆக அதிகரிப்பதற்கும் பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

அது மாத்திரமன்றி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் விளம்பரங்கள் மற்றும் சிறுவர் கார்ட்டூன் திரைப்படங்களுக்கு குரல் கொடுப்பதற்காக சிறுவர்களைப் பயன்படுத்துவது தொடர்பிலும் விசேட அவதானம் செலுத்தப்பட்டிருக்கிறது.

தொலைக்காட்சிகளில் வெளியாகும் விளம்பரங்களில் சிறுவர்கள் பயன்படுத்தப்படுவது தொடர்பில் க ண்காணிப்பதற்கும், அதனை ஒ ழுங்குபடுத்துவதற்கும் விசேட பிரிவொன்று உருவாக்கப்பட்டிருப்பதாகவும், திருத்தப்பட்ட நெ றிமுறைகள் அமைச்சரவையின் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்டு, அதன் பின்னர் 2020 டிசம்பர் மாதத்திலிருந்து அவை ந டைமுறைப்படுத்தப்படும் என்றும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை தனியார் தொலைக்காட்சி யொன்றில் வடிவமைப்பாளராகப் பணியாற்றிய 54 வயதான நபரொருவர் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்குபற்றிய சி றுவர்களை து ஷ்பி ரயோ கத்துக்கு உட்படுத்திய கு ற்றச்சா ட்டின் பேரில் கைது செய்யப்பட்டமையை அடுத்து இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

hey