வவுனியா மாவட்ட செயலத்தில் தேர்தலுக்காக மின்சார பணிகள் பூர்த்திவவுனியாவில்

நாடாளுமன்ற தேர்தல் எதிர்வரும் 5ம் திகதி இடம்பெறவுள்ள நிலையில் வவுனியா மாவட்ட செயலகத்தில் தேர்தல் பணிகளுக்காக மின்விளக்குகள் , மின்சார வசதிகள் என்பன பூர்த்தியடைந்துள்ளன.

விளம்பரத்திற்கு கீழே செய்திகள் தொடரும்

வவுனியா மாவட்ட செயலகத்திலிருந்து வாக்குப்பெட்டிகள் எடுத்துச் செல்லப்படவுள்ளதுடன் , உத்தியோகத்தர்களுக்கு இங்கிருந்து அவர்களது வாக்குசாவடிகளுக்கு கடமைக்கு செல்வார்கள்

அத்துடன் வாக்கேண்ணும் நிலையமாகவும் வவுனியா மாவட்ட செயலகம் காணப்படுவதினால் மாவட்ட செயலகத்தினுள் 70 மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளதுடன் ஏனைய மின்சார வசதிகளும் பொருத்தும் நடவடிக்கை பூர்த்தியடைந்துள்ளது.

நாளையதினம் வவுனியா மாவட்ட செயலகத்திலிருந்து வாக்குப்பெட்டிகள் வாக்குசாவடிகளுக்கு பொலிஸ் பாதுகாப்புடன் எடுத்துச் செல்வதற்குறிய நடவடிக்கைகளும் முன்னேடுக்கப்படுகின்றன

hey