வவுனியாவில் தேர்தல் தொடர்பில் கலந்துரையாடல்வவுனியாவில்

சுதந்திமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கமான கபே அமைப்பினரின் தேர்தல் தொடர்பான கலந்துரையாடல் வவுனியா ஹேரவப்போத்தானை வீதியில் அமைந்துள்ள விருந்தினர் விடுதியில் இன்று (24.07.2020) காலை இடம்பெற்றது.

“சமாதானமான தேர்தலை நோக்கி” என்ற தொனிப்பொருளின் கீழ் CaFFE அமைப்பு நடத்திய குறித்த கலந்துரையாடல் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மனோராஜ் அவர்களின் தலமையில் நடைபெற்றிருந்தது.

இதன் போது கண்காணிப்பு தொடர்பான தெளிவுபடுத்தல் , தேர்தல் விதிமுறைகள் , சுகாதார நடைமுறை போன்றன தெளிவுபடுத்தப்பட்டது.

குறித்த கலந்துரையாடலில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் , கண்காணிப்பாளர்கள் , இளைஞர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

hey