சற்றுமுன் வெளியாகிய தகவல் 27ம் திகதி முதல் அனைத்து பாடசாலைகளும் மீளவும் ஆரம்பம்நாட்டின் அனைத்து பாடசாலைகளுக்கும் வழங்கப்பட்டுள்ள விடுமுறை மேலும் ஒருவாரத்திற்கு நீ டிக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சு சற்றுமுன் விடுத்த அறிவிப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, நாட்டின் அனைத்து பாடசாலைகளும் எதிர்வரும் 27ஆம் திகதி முதல் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், குறித்த தினத்தில் தரம் 11, 12 மற்றும் 13 ஆம் வகுப்பு மாணவர்கள் மாத்திரமே பாடசாலைக்கு அழைக்கப்படுவார்கள் என கல்வி அமைச்சு சு ட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன், ஏனைய வகுப்பு மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் பொதுத் தேர்தலின் பின்னரே ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஏனைய வகுப்பு மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள், ஆகஸ்ட் 10ஆம் திகதியே ஆரம்பமாகவுள்ளன.

மேலும், ராஜாங்கனை மற்றும் வெலிக்கந்த ஆகிய வலயக் கல்விப் பிரிவுகளில் உள்ள மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகளை ஆகஸ்ட் 10ஆம் திகதிக்கு முன்னர் ஆரம்பிக்க வேண்டாம் எனவும் உரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

hey