வவுனியா உட்பட நாடு முழுவதும் மூடப்பட்ட சுவர்ணமஹால் நிறுவனம்வவுனியா

இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது 2020 யூலை 10ஆம் திகதி நடைபெற்ற அதன் கூட்டத்தில், 2011ஆம் ஆண்டின் 42ஆம் இலக்க நிதித்தொழில் சட்டத்தின் 31ஆம் பிரிவின் நியதிகளின் பிரகாரம் 2020 யூலை 13ஆம் திகதியிலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் ஈரிஐ பினான்ஸ் லிமிடெட் மற்றும் சுவர்ணமஹால் பினான்ஸ்சியல் சேர்விஸஸ் பிஎல்சி நிறுவனங்களின் வியாபார நடவடிக்கைகளை இடைநிறுத்துவதற்குத் தீர்மானித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் வங்கியல்லா நிதியியல் நிறுவனங்கள் மேற்பார்வைத் திணைக்களத்தின் பணிப்பாளர் 2000ஆம் ஆண்டின் 56ஆம் இலக்க நிதிக் குத்தகைக்குவிடல் சட்டத்தின் 9(1)ஆம் பிரிவின் நியதிகளின் கீழ் நிதிக் குத்தகைக்குவிடல் நிறுவனங்களாக,

பதிவுசெய்யப்பட்ட ஈரிஐ பினான்ஸ் லிமிடெட் மற்றும் சுவர்ணமஹால் பினான்ஸ்சியல் சேர்விஸஸ் பிஎல்சியின் பதிவுச் சான்றிதழ்களை 2020 யூலை 13ஆம் திகதியிலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் இடைநிறுத்தியுள்ள நிலையில் வவுனியாவிலுள்ள குறித்த நிறுவனம் சீல் வைக்கப்பட்டு மூடப்பட்டுள்ளது.

வவுனியா நகரில் அமைந்துள்ள சுவர்ணமஹால் பினான்ஸ்சியல் சேர்விஸஸ் பிஎல்சி நிறுவனத்தின் கட்டிடத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளதுடன் அதன் வர்த்தக நடவடிக்கை நேற்று (13.07.2020) மாலை முதல் நிறுத்தப்பட்டுள்ளது.

hey