சற்றுமுன் வவுனியாவூடாக தலைமன்னார் நோக்கி பயணிக்கும் மிகப் பெரிய ஊர்திகள்வவுனியாவில்

இலங்கை மின்சார சபையுடன் இணைந்து காற்றாலையால் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்திற்கு வெளிநாடுகளுடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள்

அடிப்படையில் திருகோணமலை துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்ட ஒரு தொகுதி காற்றாலைகள் வவுனியா – மன்னார் வீதியூடாக இன்று (05.07.2020) இரவு 9.00 மணியளவில் எடுத்து செல்லப்பட்டது.

மன்னாரில் பொருத்தப்படும் குறித்த காற்றாலைக்கான பாகங்களே இவ்வாறு இரவு சமயத்தில் மிகப்பெரிய ஊர்தியில் எடுத்துச் செல்லப்பட்டது.

குறிப்பாக வவுனியா – மன்னார் வீதி பல வருடங்களாக குன்றூம் குழியுமாக காணப்பட்டு தற்போது வீதி செப்பனிடப்படும் பணிகள் ஆரம்பித்துள்ள நிலையில் இவ்வாறான பார ஊர்திகளினால் வீதி அபிவிருத்தி நடவடிக்கைக்கு பாதிப்பு ஏற்படும் வாய்ப்புக்கள் உள்ளன என மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

எனவே உரிய அதிகாரிகள் இவ்விடயத்தில் கவனம் செலுத்தி மாற்று நடவடிக்கையினை மேற்கொள்வார்களா?

hey