வவுனியா வர்த்தக நிலையமொன்றின் சட்டவி ரோத செயற்பாடு:மக்கள் அ திருப்திவவுனியா வடக்கு

வவுனியா வடக்கு, நெடுங்கேணி பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் விற்பனை செய்யப்படும் சில பொருட்களின் விலை மற்றும் காலாவதித் திகதி என்பனவற்றை மறைத்து வேட்பாளர் ஒருவரின் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக பொது மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

வவுனியா வடக்கு, நெடுங்கேணி பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் குளிர்பானம் மற்றும் சோடா போன்ற குளிர் பானங்களை விற்பனை செய்யும் போது குளிர்பான போத்தல்களின் பெயர், காலாவதியாகும் திகதி, உற்பத்தி திகதி, விலை என்பனவற்றினை மறைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர் ஒருவரின் ஸ்டிக்கர்களை ஒட்டி விற்பனை செய்து வருவதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு குளிர்பானங்ளை விற்பனை செய்யும் குறித்த வர்த்தகர் மீது வவுனியா பாவணையாளர் அதிகார சபையினர் ச ட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.

தேர்தல் ப ரப்புரைகளை முன்னெடுக்கும் போது மேற்கொள்ளப்படும் இவ்வாறான செயற்பாடுகளால் காலாவதியான மற்றும் ப ழுதடைந்த பொருட்களையும் தாம் பெற்றுக்கொள்ள நேரிடும் எனவும் மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இது தொடர்பில் சம்பந்தப்பட்ட வேட்பாளர் கவனம் செலுத்த வேண்டும் எனவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்விடயம் தொடர்பில் தேர்தல் பி ரச்சார ஸ்டிக்கர்களில் காணப்படும் வேட்பாளரை தொடர்பு கொண்டு வினவிய போது, இவ்வாறான ஓர் பி ரச்சாரத்தினை தாம் மேற்கொள்ளவில்லையென தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

hey