வவுனியா – ஓமந்தையில் க ஞ்சாவுடன் இளைஞரொருவர் கைதுவவுனியா – ஓமந்தை பகுதியில் இளைஞரொருவரிடமிருந்து இன்று பிற்பகல் 1.707 கிலோகிராம் க ஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா பிராந்திய ம து ஒ ழிப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் ஓமந்தை பர்நாட்டகல் குளப் பகுதியில் சென்ற இளைஞரிடம் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது அவரது உ டமையிலிருந்து குறித்த க ஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

இதன்போது ஓமந்தை – பறநாட்டங்கல் பகுதியை சேர்ந்த 27 வயதுடைய இளைஞரே கை து செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரை வவுனியா பிராந்திய ம து ஒ ழிப்புபிரிவு பொலிஸார், ஓமந்தை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளின் பின் சந்தேகநபரை நாளைய தினம் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

hey