கொ ரோ னாவால் பா திக்கப்பட்ட வர்த்தகர்களுக்கு உதவி : மத்திய வங்கி அறிவிப்பு!!கொ ரோ னா வை ரஸினால் பா திக்கப்பட்ட வர்த்தகர்களுக்கு உதவும் வகையில் மத்திய வங்கி சௌபாக்யா கடன் திட்டத்தின்கீழ் மீள்நிதியளிப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்ததிட்டத்துக்காக மத்திய வங்கி 27.9 பில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது. இதன் அடிப்படையில் 13,861 பேருக்கு முதல் கட்டமாக கடன்கள் வழங்கப்படவுள்ளன. இந்தக்கடன்களுக்கு 4 வீத வட்டியே அறிவிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிலும் முதல் 6 மாதக்காலத்துக்கு கடன் தவணை மீளச்செலுத்ததேவையில்லை. பின்னர் 24 மாதங்களில் குறித்த கடன்களை மீளசெலுத்தவேண்டும் என்று மத்திய வங்கி அறிவித்துள்ளது.

இதேவேளை இரண்டாம் கட்டமாக வர்த்தக நோக்க கடன்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் முகமாக மத்திய வங்கி வணிக வங்கிகளுக்கு 1வீத வட்டியில் 120 பில்லியன் ரூபாவை வழங்கவுள்ளது.

hey