நம் முன்னோர்கள் தொப்பை வராமல் இருக்க இந்த அற்புத பானத்தை தான் அடிக்கடி குடிப்பாங்களாம்…?அது என்ன தெரியுமா?



இப்போது உள்ள காலகட்டத்தில் அனைவரையும் கவலை அடைய செய்யும் பெரிய பிரச்சனை எது என்றால் அது தொப்பை.உடல் உழைப்பு இல்லாத இந்த அவசர யுகத்தில் 10ல் 8 பேர் தொப்பை பிரச்சினையால் அவதிப்படுகின்றனர்.இந்த தொப்பையை குறைக்க பல்வோறு வழிகளில் முயற்சி செய்து கொண்டு வருகின்றனர்.இருப்பினும் சில எளிய இயற்கை உணவுகள் மூலம் கூட தொப்பை கரைக்க முடியும்.இதற்கு வாழைத்தண்டு பெரிதும் உதவிபுரிகின்றது. ஏனெனில் முந்தைய காலத்தில் வாழைத்தண்டை மக்கள் தங்கள் உணவில் அதிகம் சேர்த்து வந்தார்கள்.அதனால் தான் நம் முன்னோர்கள் தொப்பையின்றி இருந்தனர்.அந்தவகையில் நாமும் தொ ப்பையின்றி இ ருக்க வாழைத்தண்டை எப்படி பயன்படுத்தலாம் என இங்கு பார்ப்போம்.

தேவையான பொருட்கள்வாழைத்தண்டு – 1 கப் (நறுக்கியது),எலுமிச்சை சாறு – 1 டேபிள் ஸ்பூன் , தண்ணீர் – 1 கப் , உப்பு – 1 சிட்டிகைசெய்முறைஒரு கப் நீரில் நறுக்கிய வாழைத்தண்டைப் போட்டு 1 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.பின் அதை அப்படியே பிளெண்டரில் போட்டு அரைத்து, வடிகட்டி பயன்படுத்தி, சாற்றினை பிரித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு அதில் எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்து கலந்து குடிக்க வேண்டும்.வாழைத்தண்டு ஜூஸை தயாரித்த உடனேயே குடிக்க வேண்டும்.இந்த ஜூஸை உங்களின் அன்றாட டயட்டில் சேர்த்துக் கொள்வதன் மூலம், உங்கள் தொப்பை வேகமாக குறைவதோடு, சிறுநீரக கற்களின் அபாயமும் தடுக்கப்படும்.

hey