உங்க வீட்டில் எலிகளால் தொல்லையா? இதை மட்டும் செய்யுங்க போதும்… இயற்கை முறையிலேயே எலியை துரத்தி விடலாம்பலரது வீடுகளிலும் எலி ஒரு பெரும் பிரச்னையாக இருக்கும். ஒரு எலியோடு, சுந்தரா டிராவல்ஸ் படத்தில் வடிவேலு பட்டபாடு இப்போது நினைத்தாலும் சிரிப்பு வரும்.ஆனால் அது தான் நிஜம். சுந்தரா டிராவல்ஸில் வடிவேலுவின் பாஸ்போர்ட்டை கடித்த எலியைப் போல, பலரது வீடுகளிலும் அரசு ஆவணங்களைக் கூட கடித்த எலிகள் உண்டு.இந்த எலிகளை உங்கள் வீட்டுப்பக்கமே வரவிடாமல் செய்ய இயற்கையான முறையில் இவைகளைச் செய்தாலே போதும். ஜலதோசத்தை குணப்படுத்தும் இயற்கை வைத்தியத்தில் நொச்சி இலைக்கு முக்கிய பங்கு உண்டு. ஆனால் இதன் வாசனை கொசு மற்றும் எலிகளுக்கு அறவே ஆகாது.

இதனால் கொஞ்சம் நொச்சி இலைகளை எடுத்து வந்து, வீட்டில் எங்கெல்லாம் அடிக்கடி எலிகளின் நடமாட்டம் இருக்கிறதோ அங்கெல்லாம் வைக்கலாம். மூன்றுநாள்கள் இதைத் தொடர்ச்சியாக வைத்தாலே எலிகள் உங்கள் வீட்டுப் பக்கமே வராது.

நொச்சி இலைக் கிடைக்காத பட்சத்தில் சாலையோரம் பரவலாகக் கிடைக்கும் எருக்க இலையை பயன்படுத்தலாம். இதை குழந்தைகள் இருக்கும் வீட்டில் பயன்படுத்துவது ரிஸ்க் என்பதால் அவர்கள் தூங்கியதும் வைக்கலாம். இந்த இலைகளை கட் செய்யும் போது அதன் பால் மேலே பட்டுவிடக் கூடாது. அப்படி பட்டுவிட்டால் உடலில் அரிப்பு ஏற்படக் கூடும்.

முக்கியமான விசயம் என்னவென்றால் இந்த இலைகள் எப்போதும் ப்ரஸ்ஸாக இருக்க வேண்டும். நம் முன்னோர்கள் விவசாயத்தில் வயலில் எலி தாக்கத்தைத் தடுக்க இந்த நுட்பங்களைத்தான் கடைபிடித்தனர்.

hey