வாயுத்தொல்லையை உடனே சரி செய்யும் வீட்டு வைத்தியம் : ஒருமுறை செய்து பாருங்கள் : பகிர்ந்து மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்வாயுத்தொல்லை உடையவர்கள் சில சமயங்களில் பெரும் அசெளகாரியங்களுக்கு முகம் கொடுக்கின்றனர். வாயுத்தொல்லையை ஆரம்பத்திலே சரிசெய்துவிட வேண்டும். இல்லாவிடின் இது ஒரு சிக்கலான பிரச்சினையாக மாறிவிடும்.வாயுத்தொல்லையை எளிய முறையில் சரி செய்யும் வீட்டு வைத்திய முறை பற்றி இங்கே பார்க்கலாம்.தேவையான பொருட்கள்: – சிறிய துண்டு இஞ்சி.– 10 அல்லது 12 துளசி இலைகள்.செய்முறை:இஞ்சியை மேலும் சிறிய துண்டுகளாக வெட்டி துளசி இலைகளுடன் சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் மிக்ஸியில் போட்டு அரைத்துக்கொள்ள வேண்டும். அரைத்து வந்த கலவைக்கு 1/4 டம்ளர் தண்ணீர் சேர்த்து மீண்டும் மிக்ஸியில் இட்டு நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும்.

அரைத்து வரும் சாற்றை வடித்து எடுத்துக்கொள்ள வேண்டும். இதை காலை, மாலை இரண்டு நேரம் என மூன்று நாட்களுக்கு தொடர்ந்து குடித்துவ வர,

வாயுத்தொல்லை இல்லாமல் போய்விடும். அதன் பிறகு வாயு பிரச்சினை இருக்காது.உங்கள் உணவுப்பழக்க வழக்கத்தையும் இதற்கு ஏதுவான முறையில் சற்று மாற்றி அமைத்துக்கொண்டால் இன்னும் சிறந்த பலனை பெறலாம்.

hey