2019 மற்றும் 2020 ஆண்டுகளுக்கான பெரும்போக பயிர்ச் செய்கைகளில் ஏற்பட்ட சே தங் களுக்கான ந ட்ட ஈ டு வ ழங்கும் நடவடிக்கை ஆரம்பம்2019 மற்றும் 2020 ஆண்டுகளுக்கான பெரும்போக பயிர்ச் செய்கைகளில் ஏற்பட்ட சே தங் களுக்கான ந ட்ட ஈடு வ ழங்கும் நடவடிக்கை ஆ ரம்பிக்கப்பட்டுள்ளது.

கமத்தொழில் மற்றும் கமநலக் கா ப்புறுதி சபை இன்று வெளியிட்டுள்ள விசேட ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் மற்றும் கடற்றொழிலாளர்களுக்கான ஓய்வூதியம் வழங்கும் நடவடிக்கை எதிர்வரும் 22ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், அதற்கு மேலதிகமாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில், 2019 மற்றும் 2020 ஆண்டுகளுக்கான பெரும்போக பயிர்ச் செய்கைகளில் ஏற்பட்ட சேதங்களுக்கான நட்டஈடு வழங்கும் நடவடிக்கை ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, கமத்தொழில் மற்றும் கமநலக் காப்புறுதி சபை குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, ஹம்பாந்தோட்டை மாவட்டம் தவிர்ந்த ஏனைய மாவட்ட விவசாயிகளுக்கான நட்டஈடு, அவர்களது வங்கிக் கணக்குகளுக்கே வைப்பிலிடும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

hey