சனியோடு கூட்டணி சேரும் புதன்… அழிவை தடுக்க 12 ராசிக்கும் பரிகாரம்! யார் யாருக்கு நன்மை?புதன் கிரகம் தனசு ராசியில் இருந்து மகரம் ராசிக்கு இன்று முதல் சஞ்சாரம் செய்கிறார். இதனால் 12 ராசிக்கும் எப்படியான பலன்கள் அமையும் என்று பார்க்கலாம்.மேஷம்-புதன் உங்கள் ராசிக்கு 10ஆம் இடத்தில் சஞ்சரிப்பது நன்மையை தரக்கூடியது. வீட்டில் ஆடம்பர பொருள் சோ்க்கையிருக்கும். புதன்கிழமையன்று ஆஞ்சநேயரையும், மதுரை மீனாட்சியையும் வழிபட நன்மைகள் நடக்கும்.ரிஷபம்-ரிஷப ராசிக்கு புதனால் பணம் வரும் வாய்ப்பு அதிகரிக்கும்.தந்தையின் உடல்நிலையில் கவனம் தேவை. புதன்கிழமையன்ற பெருமாள் கோவிலுக்கு சென்று வர நன்மைகள் நடைபெறும்.மிதுனம்-பண வருமானம் நன்றாக இருக்கும். சிலா் வீடு மனை நிலம் வாங்குவதற்கு உாிய காலம் இதுவாகும்.தேவையில்லாத பேச்சுக்களை குறைக்கவும், வார்த்தைகளை கொடுத்து வம்புகளை விலைக்கு வாங்க வேண்டாம்.நரம்பு பிரச்சினைகள் ஏற்படுவதை தவிர்க்க சகோதரிகளுக்கு புடவை பரிசளிக்கலாம்.

கடகம்-கடன் கேட்டிருந்தவா்களுக்கு கடன் கிடைக்கும். வண்டி, வாகனம் வாங்கலாம். உடல் நிலையில் கவனம் தேவை.பயணத்தில் எச்சாிக்கை தேவை. பெருமாள் கோவிலுக்கு அபிஷேகத்திற்கு சந்தனம் வாங்கிக்கொடுக்க நன்மைகள் நடைபெறும்.சிம்மம்-சிம்ம ராசிக்கு பண வரவு அதிகரிக்கும். திடீர் பண வருவாய் கிடைக்கும். புகழ் செல்வம் செல்வாக்கு அதிகரிக்கும்.ஆலயங்களுக்கு தீர்த்த யாத்திரை செல்ல நோிடும்.தோல் நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. சூரிய நமஸ்காரம் செய்வது நன்மை தரும்.

கன்னி-கன்னி ராசிக்கு பணம் வரும் வாய்ப்பு அதிகரிக்கும். உத்யோகம் தொழிலில் எதிா்பாா்திருந்த இடத்தில் தடைகளை ஏற்படும். தொழில் விாிவாக்கப்பணிகள் தாமதப்படும். கோவிலில் பசுவிற்கு அகத்திக்கீரை வாங்கிக் கொடுக்க நன்மைகள் நடக்கும்.துலாம்-பண வருமானம் அதிகாிக்கும். அதற்கு ஏற்ப செலவினமும் அதிகாிக்கும். வண்டி வாகன லாபம் உண்டு. உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் மாற்றங்கள் ஏற்படும்.பசுவிற்கு வாழைப்பழம் கொடுக்கலாம் மேலும் நன்மைகள் அதிகரிக்கும்.

விருச்சிகம்-நண்பா்கள் உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவா்களுக்கு பிரச்னை ஏற்படும். பண வருமானத்திற்கு பஞ்சமிருக்காது. அதே நேரத்தில் செலவினம் அதிகாிக்கும்.தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.தனுசு-தனசு ராசிக்கு 2வது இடத்தில் புதன் சனியுடன் அமரப்போகிறார். உற்சாகமான கால கட்டமாகும். பணவருவாயும், சொத்து சோ்க்கை உண்டு.உடல் நலத்தில் கவனம் தேவை. எதிா்பாராத உடல் உபாதை ஏற்படும். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுப்பீா்கள்.

மகரம்-மகர ராசியில் அமரும் புதன் பகவானால் சிறு வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். உங்கள் முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும் காலகட்டமாகும். கும்பம்-சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு ஏற்படும். காய்ச்சல், சளி தொந்தரவுகள் ஏற்படும். தந்தையின் உடல் நிலையில் கவனம் தேவை.சனிக்கிழமை பெருமாளுக்கு நெய் தீபம் ஏற்றி வணங்க நன்மைகள் நடைபெறும்.

மீனம்-எதிர்பார்த்த நல்ல செய்திகள் வந்து சேரும். இது யோகமான காலமாகும். பண வருமானம் அதிகரிக்கும். பங்குச்சந்தை முதலீடுகளில் இரட்டிப்பு லாபம் வரும். திடீா் வாய்ப்பு தேடி வரும்.வீட்டில் பொருள் சோ்க்கை ஏற்படும். மகாவிஷ்ணு ஆலயத்திற்கு அபிஷேகத்திற்கு சந்தனம் வாங்கித் தரலாம்.

hey