டாக்டர் படத்தின் மூலம் பிரபலமடைந்த நடிகர் ரெடின் கிங்ஸ்லி சினிமாவிற்கு வரும் முன்னர் என்ன வேலை செய்தார் தெரியுமா..? இந்த விஷயம் உங்களுக்கு தெரியுமா..?தற்போதைய தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகராக திகழ்ந்து வருபவர் ரெடின் கிங்ஸ்லி. இவர் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் நடிகை நயன்தாரா நடித்து வெளிவந்த கோலமாவு கோகிலா எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகில் அறிமுகம் ஆனார். இந்தத் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களாக நடிகை நயன்தாரா,யோகி பாபு ,ரெடின் கிங்ஸ்லி, சரண்யா பொன்வண்ணன் ஆகியோர்,நடித்திருந்தனர்.நடிகர் ரெடின் கிங்ஸ்லி பல வருடங்களுக்கு முன்பே சினிமாவில் கால் பதிக்க வேண்டி இருந்தவர்.இயக்குனர் நெல்சன் திலீப் குமார் கல்லூரியில் படிக்கும்போது நெருங்கிய நண்பராக ரெடின் கிங்ஸ்லியுடன் நல்ல பழக்கம் ஏற்பட்டது.2010ம் ஆண்டு இயக்குனர் நெல்சன் டிலிப்குமர் இயக்கத்தில் நடிகர் சிலம்பரசன் நடித்து வேட்டை மன்னன் எனும்

திரைப்படத்தில் காமெடி நடிகராக ரெடின் கிங்ஸ்லி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த நிலையில்,இந்த திரைப்படம் ஒரு சில பிரச்சனையால் வெளியாகாமல் போனது.அதன் பிறகே கோலமாவு கோகிலா எனும் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் கால் தடம் பதித்தார்.

அதன் பிறகு இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வெளிவந்த டாக்டர் எனும் திரைப்படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிக்காட்டி மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று இருந்தார்.அந்த வகையில் டாக்டர்,அண்ணாத்த, கோலமாவு கோகிலா, அவள் வருவாளா,எல் கேஜி, ஏ1,ஜாக்பாட்,நெற்றிக்கண் போன்ற,

ஏராளமான திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்து வருகிறார்.இந்த நிலையில் நடிகர் ரெடின் கிங்ஸ்லி பற்றிய சுவாரஸ்யமான தகவலை உள்ளது.இவர் சினிமாவில் வருவதற்கு முன்பு எக்ஸிபிஷன் ஆர்கனை சர் ஆக பணிபுரிந்து வந்தார்.இவரை சினிமாவில் காமெடியனாக தான் பார்த்திருக்கிறோம்.ஆனால் இவர் பிசினஸ் என்று வந்துவிட்டால்,

ரொம்ப கண்டிப்பாக தான் வேலை செய்வார்.அப்போதான் வேலையாட்களிடம் வேலை வாங்க முடியும் என ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.மேலும் இவருக்கு சிறு வயதிலிருந்தே நடனத்தில் மிகுந்த ஆர்வம் உடையவர்.ஆகையால் நடிகர் அஜித் நடித்த அவள் வருவாளா எனும்,

திரைப்படத்தில் நடன குழுவில் பாடலுக்கு நடனமாடியிருக்கிறார்.காமெடி நடிகராக இருந்தாலும் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடிப்பது இவரின் ஆசையாம்.மேலும் தற்போது இயக்குனர் நெல்சன் டிலிப்குமர் இயக்கத்தில்,

நடிகர் விஜய் நடித்துவரும் பீஸ்ட் எனும் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.தற்போது உள்ள அனைத்து பிரபல நடிகர்களுடன் நடித்து வரும் நிலையில் எதிர்காலத்தில் பிரபல காமெடி நடிகராக வருவார் என சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்..

hey