காதல் தொல்லை கொடுக்கும் அமீர்..? ஆனாலும் பாவனியின் அமைதிக்கு என்ன காரணம் தெரியுமா…?இறுதிகட்டத்தை எட்டியுள்ள பிக்பாஸ் சீசன் 5ல் பல எதிர்பாராத விஷயங்கள் அரங்கேறி வருகின்றன, Freeze Taskல் ஒவ்வொரு நபரின் குடும்ப உறுப்பினர்கள் உள்ளே வந்து போட்டியாளர்களை குஷிப்படுத்தினர்.இதில் ஆரம்பத்தில் இருந்தே பாவனிக்கு தான் ஆர்மி தொடங்கப்பட்டது, நாளடைவில் அவருடைய செயல்பாடுகளால் ரசிகர்கள் குறையத் தொடங்கினாலும் ஒரு கணவரை இழந்த பெண் நடந்து கொள்ளும் விதம் இப்படித்தான் இருக்கும் என பலரும் ஆதரவும் தெரிவித்தனர்.இதில் வைல்டு கார்டு என்ட்ரியாக உள்ளே நுழைந்த அமீர்,

சில நாட்களிலேயே பாவனியிடம் தன்னுடைய காதலை வெளிப்படுத்தினார்.ஆனாலும் பாவனி “நோ” சொல்லிவிட்டதாக கூறினார், தொடர்ந்தும் தொல்லை கொடுத்து வந்த அமீர் ஒரு கட்டத்தில் பாவனியை முத்தமிட்டார்.

இது சர்ச்சையை கிளப்பிய நிலையில், பாவனியின் சகோதரி உள்ளே வர சில விஷயங்களை இருவரும் பேசிக் கொண்டனர்.அப்போது, இந்த வீட்டிற்குள் அனைவரும் உன்னிடம் நன்றாக தான் இருக்கிறார்கள். ஆனால் ஒரே ஒருவர் தான் உன்னுடைய பெயர் கெட்டுப்

போய் விடுமோ என்று பயமாக இருக்கிறது.அவரிடம் கவனமாக இரு, என்று அவருக்கு அறிவுரை கூறினார்.இதற்கு பதிலளித்த பாவனி, எனக்கும் தெரியும், பலமுறை நான் புரியவைத்து விட்டேன், நான் கோபப்பட்டு பேசி அவர்களுடைய வாழ்க்கையும் வீணடிக்க விரும்பவில்லை.

கடினமாக சொல்வதால் என்னுடைய பெயரும் கெட்டுப் போய்விடும், அது மட்டுமல்லாமல் அவர்களுடைய வாழ்க்கையும் வீணாகி விடக்கூடாது.இப்போது யாராவது என்னிடம் காதலிக்கிறேன் என்று சொன்னால் சிரிப்பு தான் வருகிறது,

அவர்களிடம் முரட்டுத்தனமாகவும், கடுமையாகவும் நடந்து கொள்வதில் எனக்கு விருப்பமில்லை, இதுபோன்று பலரை நான் பார்த்துவிட்டேன் என தெரிவித்துள்ளார்.இந்த சின்ன வயதில் இவ்வளவு முதிர்ச்சியா என பாவனியின் ரசிகர்கள் பலரும் அவரை புகழ்ந்து வருகின்றனர்.

hey