பிக்பாஸ் அமீரின் தாய் இவ்வளவு அழகானவரா? கண்ணீரோடு ஷேர் செய்யும் ரசிகர்கள்கதை சொல்லும் டாஸ்க் மூலமாக அமீர் ரசிகர்களின் மனதில் கண்ணீரோடு இடத்தை பிடித்து விட்டார்.அமீர் இழந்த மிகப்பெரிய பொக்கிஷமான கடந்தகால வாழ்க்கையை நினைத்து ரசிகர்களும் பீல் பண்ணி வருகின்றனர். தன்னுடைய அம்மா பேரழகி என்று கூறியது போல ரசிகர்கள் அமீர் அம்மாவின் போட்டோவை வைரலாக்கி வருகின்றனர்.பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு சீசனிலும் கதை சொல்லும் டாஸ்க் வழக்கமாக நடைபெற்று வருகிறது. இதில் தற்போது சீசன்களில் கலந்து கொண்ட 18 போட்டியாளர்களும் ஆரம்பத்திலே கதையைக் கூறி முடித்து விட்டனர்.ஆனால் வைல்ட் கார்ட் என்ட்ரியாக வெளியே வந்திருக்கும் இரண்டு போட்டியாளர்களும் தங்களுடைய கதைகளை கூறவில்லையே என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். ரசிகர்களின் எதிர்பார்ப்பு தற்போதைய வாரத்தில் நிறைவேறிவிட்டது.

சஞ்சீவ்விற்கு அடுத்து பேசிய அமீர் தன்னுடைய வாழ்க்கையின் மொத்த நிகழ்வுகளையும் க ண்ணீரோடும் அனைவரையும் கலங்க வைக்கும் விதமாக கூறியுள்ளார்.இவருடைய கதையை கேட்டு ரசிகர்கள் பலர் ஃபீல் பண்ணிக் கொண்டிருக்கின்றனர். ஏற்கனவே ஒரு சில தினங்களுக்கு

முன்பு சமூக வலைத்தளத்தில் அமீர் பற்றிய ரகசியங்கள் பல வெளியாகி இருந்தது. இது ஒரு சிலருக்கு தெரிந்து இருந்தாலும் பலருக்கும் தெரியாமல் தான் இருந்தது.அமீர் குழந்தையாக இருக்கும்போதே தன்னுடைய தந்தையை இழந்துவிட்ட பிறகு தன்னுடைய அண்ணனுடன் அம்மாவுடன் வாழ்ந்து வந்துள்ளார். அம்மாவுடைய திடீர் இழப்பு அவரை எந்த அளவு பாதித்திருக்கிறது என்று மனம் உருகி கண்ணீர் மல்க கூறியிருந்தார்.

அதைக் கேட்ட போட்டியாளர்கள் மட்டுமல்லாமல் அந்த நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்கள் கூட பலர் பீல் பண்ணி விட்டனர். இளமைக்காலத்தில் வறுமையின் காரணமாக அவர் வேலை செய்த விதம், தற்போது அவருக்கு ஆதரவு கொடுத்திருக்கும் நல்லுள்ளங்கள் குணம் போன்றவை அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்துவிட்டது.

பொதுவாக ஆண் பிள்ளைகளுக்கு எப்போதுமே அம்மாதான் ஹீரோயினி. அது வழக்கமாக பல வீடுகளில் நடப்பதாக இருந்தாலும் அவர் தன்னுடைய அம்மாவை பேரழகி என்று கூறியுள்ளார். ரொம்ப பாசக்கார மற்றும் கண்டிப்பு கலந்தவர் என்று கூறியிருந்தார்.

இதைக் கேட்டதும் பல ரசிகர்களுக்கு அவருடைய அம்மாவின் புகைப்படத்தை பார்க்க வேண்டும் என்று தோன்றியிருக்கும். ஆனால் அவரின் தீவிர ரசிகர்கள் அமீரின் அம்மா போட்டோக்களை தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

இதை பார்த்ததும் பலர் உண்மையில் அமீரின் அம்மா பெரிய பேரழகிதான் என்றும் கண்ணீரோடு கூறி வருகின்றனர். ஆனால் அம்மா இல்லாத வாழ்க்கையில் அமீர் எவ்வளவு து யரப்பட்டு இருக்கிறார் என்று நினைக்கும்போதே பலருக்கும் மனது வ லிக்கிறது என்று கூறி வருகின்றனர்.அதுமட்டுமல்லாமல் அவர் இந்த நிகழ்ச்சியில் வெற்றி பெற வேண்டும் கூறிவருகின்றனர்.

hey