பிக்பாஸ் 5 வீட்டிற்கு வந்த ராஜுவின் அம்மா மற்றும் மனைவி- அவர் செய்த விஷயம், எமோஷ்னல் வீடியோவெள்ளித்திரையை காட்டிலும் சின்னத்திரையில் ஒளிப்பரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் தான் தற்போதைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ளது. அந்த அளவிற்கு மக்கள் அந்த நிகழ்ச்சியின் மீது பலத்த வரவேற்பை வைத்துள்ளனர். இந்த வகையில் பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் அணைத்து நிகழ்ச்சிகளும் மக்களிடையே பெருமளவில் பார்க்கப்பட்டு வருவதோடு நல்ல வரவேற்பையும் பெற்று வருகிறது.இந்த நிலையில் இந்த சேனலில் கடந்த நான்கு வருடங்களாக பலரது மனதில் நீங்காத இடத்தை பிடித்ததோடு முதன்மை ரியாலிட்டி நிகழ்ச்சியாக ஒளிப்பரப்பானது பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்த உலக அளவில் மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ளது மேலும் இதில்

கலந்து கொள்ளும் போட்டியாளர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் தங்களை அடையாளபடுத்தி கொள்வதோடு திரையுலகிலும் பல முன்னணி படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்று வருகின்றனர்.

பிக்பாஸ் 5வது சீசன் போட்டியாளர்கள் இத்தனை நாள் வீட்டில் இருந்ததை விட இந்த வாரம் முழுவதும் சந்தோஷமாக இருப்பார்கள்.காரணம் அவரவர்

வீட்டில் இருந்து உறவினர்கள் வந்துகொண்டிருக்கிறார்கள். அக்ஷாரா, சிபி ஆகியோரை தொடர்ந்து இன்று காலை நிரூப்பின் தந்தை வந்ததை புரொமோவாக வெளியிட்டார்கள்.

இப்போது வந்துள்ள இரண்டாவது புரொமோவில் ராஜுவின் மனைவி மற்றும் அம்மா வீட்டிற்குள் வருகிறார்கள்.அவர்களை எதிர்ப்பார்க்காத ராஜு இருவரையும் நன்கு கட்டியணைத்து எமோஷ்னல் ஆகிறார். அந்த கியூட்டான வீடியோ வெளியாக ரசிகர்களும் ரசித்து வருகிறார்கள்.

hey