நடிகர் விஜயின் உண்மையான ஹேயார் ஸ்டைல் இதுதானா..? நடிகர் சதீஸ் வெளியிட்ட புகைப்படத்தால் அதிர்ச்சியில் ரசிகர்கள்



தமிழ் சினிமாவில் இன்று வரை அளவில்லா ரசிகர்கள் கூட்டத்தை கொண்டவர் நடிகர் விஜய்.இவர் தமிழில் நடித்த படங்கள் அனைத்துமே இவருக்கு வெற்றி படமாக இருந்து வருகிறது.மேலும் இவரின் அண்மையில் ரிலீஸ் ஆனா பிகில் படமானது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று மெகா ஹிட் ஆனா திரைப்படம்.தளபதி விஜய் அவர்கள் தனது முதல் படமான தனது தந்தை இயக்கத்தில் வெளியான படமான வெற்றி மூலம் குழந்தை நட்சத்திரமாக களம் இறங்கி தற்போது தனக்கென்று ஒரு ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ளார். விஜய்யுடன் காரில் சென்றபோது எடுத்த புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் நகைச்சுவை நடிகர் சதீஷ்.

கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ஹீரோவாக நடித்த ப்ரண்ட்ஷிப் படத்தில் அவருக்கு நண்பனாக நடித்திருந்தார் சதீஷ். இந்நிலையில் தான் காரில் சென்ற புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டார்

ஹர்பஜன் சிங்.அதை பார்த்த சதீஷோ, தான் விஜய்யுடன் காரில் பயணம் செய்தபோது எடுத்த செல்ஃபியை வெளியிட்டு இது தான் என் பெஸ்ட் ரைடு என்று தெரிவித்துள்ளார்.சதீஷ் வெளியிட்ட புகைப்படம் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. அதற்கு காரணம் விஜய்யின் ஹேர்ஸ்டைல்.

சதீஷின் ட்வீட்டை பார்த்தவர்கள் கூறியிருப்பதாவது, இந்த புகைப்படத்தை வெளியிட விஜய்யிடம் அனுமதி பெற்றீர்களா?. விஜய் அண்ணாவின் ஒரிஜினல் ஹேர்ஸ்டைல் புகைப்படத்தை வெளியிட்டதற்கு நன்றி.

என் ட்விட்டர் கணக்கை யாரோ ஹேக் செய்துவிட்டார்கள் என்று சீக்கிரமாக ஒரு வீடியோ வெளியிடுங்கள் ப்ரோ என்றும், யோவ் சதீஷ், உங்களுக்கு போஸ்ட் பண்ண வேறு புகைப்படமே கிடைக்கவில்லையா என்று தெரிவித்துள்ளனர்.

அண்மையில் நெல்சன் திலீப்குமார் வெளியிட்ட புகைப்படத்தில் அழகான ஹேர்ஸ்டைலில் அசத்தலாக இருந்தார் விஜய். இந்நிலையில் சதீஷ் வெளியிட்ட புகைப்படம் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.

hey