பிரபல நடிகை வித்யாபாலனுக்கு தமிழ் நடிகர் ஒருவர் அப்பாவாக நடிக்கிறாரா..? யார் அந்த நடிகர் தெரியுமா..?தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் உச்ச நட்சத்திரமாகவும் பிரதிபலிப்பவர் தான் தல அஜித் இவ்வாறு பிரபலமான நமது நடிகர் சமீபத்தில் நேர்கொண்டபார்வை என்ற திரைப்படத்தில் நடித்து மாபெரும் வெற்றி கண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இவ்வாறு உருவான இந்த திரைப்படத்தினை இயக்குனர் வினோத் இயக்கியது மட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தினை பிரபல தயாரிப்பாளர் போனி கபூர் அவர்கள்தான் தயாரித்து வந்தார் மேலும் இந்த திரைப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடித்தவர் தான் வித்யாபாலன்.இவ்வாறு பிரபலமான நமது நடிகை பாலிவுட் மிக சிறந்த நடிகையாக வலம் வந்து கொண்டு இருக்கிறார் அந்த வகையில் தற்போது ஸ்ரீஷா குஹா தகுர்த்த இயக்கத்தில்

ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவ்வாறு உருவாகும் இந்த திரைப்படத்தில் நடிகை வித்யா பாலனுக்கு தமிழ் நடிகர் ஒருவர் அப்பாவாக நடித்து வருகிறார்.

அவர் வேறு யாரும் கிடையாது பிரபல தமிழ் நடிகர் தலைவாசல் விஜய் தான். தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்திலும்

துணை கதாபாத்திரத்திலும் வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்து புகழ் பெற்றவர் அந்த வகையில் தற்போது இந்த திரைப்படத்தில் நாயகிக்கு அப்பாவாக நடித்து வருகிறார்.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆனது முழுக்க முழுக்க மும்பை மற்றும் ஊட்டி ஆகிய இடங்களில் மட்டுமே எடுக்கப்பட்டு வருகிறது மேலும் இதுகுறித்து தலைவாசல் விஜய் அவர்கள் வித்யாபாலன் நடிப்பை நான் பல திரைப்படங்களில் திரையில் பார்த்துள்ளேன்.

இந்த வகையில் தற்போது அவருடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது மிகவும் சந்தோஷமாக உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

hey