தடுமாறிய மாற்று திறனாளிக்கு ஓடி வந்து உதவிய காவல் அதிகாரி : வைரலான நெகிழ்ச்சி காட்சிசில தருணங்களில் நாம் எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் பிறருக்கு செய்கின்ற உதவி நம்மையையும் சேர்த்து புகழின் உச்சத்திற்கு கொண்டு சேர்க்கும்.இதற்கு மிக சிறந்த எடுத்து காட்டுதான் இந்த காணொளி.மும்பையை சேர்ந்த போக்குவரத்து தலைமை காவலர் அதிகாரியான ராஜேந்திர சோனாவானே என்பவர் போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள இடங்களில் எப்போதும் போல பணிசெய்து வந்துள்ளார்.அப்போது திடீரென்று மாற்று திறனாளி ஒருவர் போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள அந்த சாலையை கடக்க முயற்சித்துள்ளார்.

இதை பார்த்த தலைமை காவலரான ராஜேந்திர சோனாவானே உடனே அந்த மாற்று திறனாளிக்கு ஓடிச்சென்று உதவியுள்ளார்.அந்த நபரின் கையை பிடித்து மெதுவாக

சாலையை கடக்க அவர் உதவி செய்துள்ளார். இந்த நெகிழ்ச்சி சம்பவத்தை அந்த சிக்னலில் நின்று கொண்டிருந்தவர்கள் வீடியோவாக எடுத்துள்ளனர்.பிறகு இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வைரலாக தொடங்கியது.

வீடியோவை காண இங்கே கிளிக் செய்யுங்கள்

hey