மணமேடைக்கு தாயின் புகைப்படத்துடன் கண்ணீர் மல்க வந்த மணமகள் : காண்போரை கண்கலங்க வைக்கும் வீடியோமணமேடையை நோக்கி வந்த மணப்பெண் மறைந்த தனது தாயின் புகைப்படத்தை கண்ணீர் மல்க கையில் கொண்டு வந்த காட்சி காண்போரை கண்கலங்க வைத்தது.ஒரு பெண்ணைப் பொறுத்தவரை, திருமண நாள் அந்த பெண்ணின் வாழ்க்கையில் மிகவும் சிறப்பு வாய்ந்த நிகழ்வுகளில் ஒன்றாகும்.தனக்கு மிகவும் நெருக்கமான நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள், குறிப்பாக அந்த பெண்ணின் பெற்றோர்களால் சூழ அனைவரின் மகிழ்ச்சியோடு நடைபெற வேண்டும் என்பது பெண்களின் எதிர்பார்ப்பாக இருக்கும் நாள் அது.பாகிஸ்தானைச் சேர்ந்த மணப்பெண் ஒருவர் கண்களில் கண்ணீரோடு மறைந்த தனது தாயின் புகைப்படத்துடன் தந்தைகளின் கைகளை பற்றிய படி,

மணமேடையை அடையும் போது கண்களில் கண்ணீரோடு வருகிறார். தற்போது அந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த மணமகள் தனது தந்தையின் கைகளை கோர்த்துக்கொண்டு மணமகனை அடையும் போது மறைந்த தனது தாயின் புகைப்படத்தை பார்த்து கண் கலங்கினார்.அதை கண்ட அவரது தந்தையும் கண் கலங்கினார்.

அப்போது அங்கிருந்த அவரது உறவினர்கள் மணமகள் மற்றும் அவருடைய தந்தையை சமாதானப்படுத்தினர்.அந்த காட்சிகள் காண்போரை கண்கலங்க செய்தது.

இஸ்லாமாபாத்தைச் சேர்ந்த மஹா வஜஹத் கான் என்ற புகைப்படக் கலைஞர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

வீடியோவை காண இங்கே கிளிக் செய்யுங்கள்

hey