நாட்டாமை டீச்சர் இப்போ எப்படி இருக்கார், என்ன பன்றார் பாருங்க. புகைப்படம் இதோநாட்டாமை படத்தின் டீசரை எல்லாருக்கும் ஞாபகம் இருக்குங்களா?? ஆமாங்க, நாம அவங்களை பத்தி தான் பார்க்க போறோம். வில்லுப்பாட்டுக்காரன் படத்தில் அறிமுகமான நடிகை ராணி தான் நாட்டாமை படத்தின் டீசர். இவர்களுடைய சொந்த ஊர் ஆந்திரா. இவங்களோட பிறந்தவங்க 6 பேர் மொத்தத்தில பெரிய குடும்பம் என்றும் சொல்லலாம். நடிகை ராணி அப்பா தெலுங்கு சினிமாவில் தயாரிப்பாளராக இருந்தவர். அதுமட்டுமில்லாமல் என்.டி. ராமராவ் நடித்த படங்களை கூட இவர் தான் தயாரிச்சாராம். மேலும், நடிகை ராணி எட்டாம் வகுப்பு வரை தான் படிச்சிருக்காங்க. ஏன்னா, அவங்க வீட்ல பெண் பிள்ளைகளா அதிகமாக படிக்க வைக்கமாட்டாங்களாம். மேலும், நடிகை ராணிக்கு சின்ன வயசுல இருந்தே டான்ஸ் ஆடுவதில் அதிக ஆர்வம் . அதோடு அதிக நேரம் டான்ஸ் ஆடிக் கொண்டே தான் இருப்பாராம். மேலும், பாபு மாஸ்டர் கிட்ட குரூப் டான்ஸராக சினிமா உலகத்துல என்ட்ரி ஆனார். அந்த சமயத்துல தான் ஒரு படத்தில்ல குரூப் டான்ஸ் ஆடுவதற்கு ராணிக்கு வாய்ப்பு கிடைத்தது.

நாட்டாமை படத்தின் மூலம் தான் இவருடைய வாழ்க்கையில் ஒரு திருப்புமுனை ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அவ்வை சண்முகி படத்தில் நடித்தார் கமல் ஹாசனுடன் நடித்தார். மேலும், இந்த படத்தில் கமலஹாசனுடன் வேலைக்காரி கதாபாத்திரத்தில் நடிப்பது முதலில் தயக்கமாக இருந்தாலும், கமல்ஹசனனே வேலைக்காரி கதாபாத்திரம் நடிக்கும்போது நமக்கு என்ன என்றும் நடித்தாராம்.

மேலும், இந்த படமும் பெரிய அளவில் ஹிட்டாச்சி. இப்படி தொடர்ந்து நடித்து இருக்கும் போது இவருக்கு 1999 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. அவருடைய கணவரும் தெலுங்கு சினிமா உலகில் தயாரிப்பாளர்.

இவர்களுடைய திருமணம் காதல் திருமணம் தான். ஆனால், வீட்டில் எதிர்ப்பு இல்லாத காதல் திருமணமாக அமைந்தது. இவர்களுக்கு ஒரு பெண்ணும் உள்ளது. அந்தப் பெண் காலேஜ் பர்ஸ்ட் இயர் படிச்சிட்டு இருக்காங்க.

அப்போ இவ்வளவு பெரிய பொண்ணுக்கு அம்மாவா? நடிகை ராணி என்று நம்ப முடியாத அளவிற்கு உள்ளார். குழந்தை பிறந்தவுடன் சினிமாவிற்கு இடைவெளி விட்டு இருந்தார். அதற்குப் பிறகு தான் விக்ரம் நடிப்பில் ஜெமினி படத்தில் மீண்டும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. மேலும் ஜெமினி படத்தில் ‘ஓ போடு பாட்டு’ வேற லெவல்ல ஹிட்டாச்சி.

இதனைத் தொடர்ந்து தெலுங்கு படத்தில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ஆனா,தமிழ் சினிமாவில் நடிக்க மீண்டும் வரவில்லை. இப்போ முழு நேரமும் ஹவுஸ் வைஃப் ஆக தான் இருக்கிறார். அப்பப்ப சில தெலுங்கு படங்களில் மட்டும் போய் நடிச்சிட்டு வருவாங்க.

அதுமட்டுமில்லாமல் நடிகை ராணி அவர்கள் சினிமாவை விட குடும்பம் தான் ரொம்ப முக்கியம் என்று அடிக்கடி கூறுவார். அதுமட்டுமில்லாம இவருக்கு குடும்பத்தலைவியாக இருப்பது தான் மிகவும் பிடித்திருக்கிறது என்றும் கூறுவார்.

hey