அடேங்கப்பா இவ்வளவு பெரிய அம்மியா? உங்க வாழ்க்கையில் இதுவரை பார்த்திருக்கவே மாட்டீங்கஅம்மி நம் இந்தியக்கலாச்சாரத்தோடு மிகவும் நெருங்கிய தொடர்பு உடையது. அதிலும் தமிழ் கலாச்சாரத்துடன் அம்மிக்கு இருக்கும் தொடர்பைப் பற்றிக் கேட்கவே வேண்டாம்.அம்மி..மிதித்து அருந்ததி பார்த்து தான் திருமணமே செய்வார்கள் தமிழர்கள். அதுமட்டும் இல்லாமல் இன்று எல்லாவற்றுக்கும் இயந்திரம் வந்துவிட்டது. அன்று இடுப்பு வளைய இட்லிக்கு பெண்கள் மாவு ஆட்டினார்கள். இன்று அந்த வேலையை கிரைண்டர் செய்கிறது. அதேபோல் கஷ்டப்பட்டு பெண்கள் துவைக்கும் வேலையை இன்று வாசிங் மிஷின் செய்கிறது. இதேபோல் அம்மியில் அரைத்து செய்த சட்னிக்கும் கூட இப்போது மிக்ஸி வந்துவிட்டது.அம்மியில் அரைத்து சட்னி செய்து சாப்பிட்ட போது நம் பெண்களிடம் ஆரோக்கியம் இருந்தது.

ஆனால் இப்போது சர்க்கரை நோய், இரத்த அழுத்தம் ஆகியவை கூடியிருப்பதற்கு இன்றைய பெண்களிடம் உடலுழைப்பு இல்லாதது தான் காரணம். இன்றெல்லாம் சின்ன அம்மியைக் கூட நம்மால் தூக்க முடியவில்லை. அவ்வளவு சோம்பேறியாகி விட்டோம். ஆனால் இந்தப்பெண் பெரிய அளவிலான அம்மியைத் தூக்கி அசால்டாக சட்னி அரைக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் செம வைரல் ஆகிவருகிறது.

hey