இந்த காமெடி நடிகரை ஞாபகம் இருக்கா..? ஒரு வேளை உணவுக்கு கூட வழியின்றி தவிக்கும் சோகம் : கண்கலங்க வைக்கும் வீடியோ உள்ளேதமிழ் சினிமாவில் நம்மை சிரிக்க வைத்த எத்தனையோ காமெடி நடிகர்களின் உண்மையான வாழ்க்கையை பார்த்தால் கண்ணீர் தான் வரும். காதல் படத்தில் நடித்த நடிகர் பிச்சை காதல் சம்பவம் முதல் சமீபத்தில்ரேணிகுண்டா பட நடிகர் தீப்பெட்டி கணேசன் குழந்தைக்கு பால் வாங்க கூட காசு இல்லை என்று வெளியிட்ட வீடியோ வரை எத்தனையோ நடிகர்களில் பரிதாப நிலையை நாம் கேள்விபட்டு இருக்கிறோம். அந்த வகையில் தற்போது காமெடி நடிகர் பறந்தாமானின் வாழ்விலும் இதே போன்ற சோகம் தான்.கொ ரோனா பிரச்சனை காரணமாக சினிமா மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகள் முற்றிலும் முடக்கப்பட்டுளள்து. இதனால் பெரிய நடிகர் நடிகைகளுக்கு பா திப்பு எதுவும் கிடையாது.

ஆனால், சினிமா மற்றும் எதுவும் கடைக்கோடி மற்றும் தினக்கூலி ஊழியர்களின் வாழ்வாதாரம் தான் பெரிதும் பா திக்கப்ட்டுள்ளது. அந்த வகையில் இந்த லாக்டவுன் காமெடி நடிகர் பரந்தாமனின் வாழ்வில் பெரும் கஷ்டத்தை ஏற்படத்தியுள்ளது.

காமெடி நடிகரான பரந்தாமன் சினிமா மற்றும் சின்னத்திரையில் சிறுசிறு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் இவர் ஓசூர் அருகே உள்ள சிவலிங்கபுரம் என்ற கிராமத்தில் வசித்து வருகிறார் தற்போது என்ற படப்பிடிப்புகள் ஏதும் இல்லாததால் தனது வாழ்வாதாரத்தை இழந்து நிற்கிறார்

பரந்தாமன் மேலும் இவரது குடும்பத்தில் ஊனமுற்ற சகோதரர்கள் மனநலம் பாதிக்கப்பட்ட தந்தை வயதான தாய் கல்லூரி படித்து வரும் சகோதரர் என்று அனைவருமே இவரை நம்பித்தான் இருக்கிறார்கள் மேலும் பரந்தாமனும் எம்ஏ படித்திருக்கிறார் ஆனால் இவரது நடிப்பு தான்.

இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற பரந்தாமன் கூறுகையில் நான் சென்னையில் ஒரு தனியார் தொலைக்காட்சியில் காமெடி நடிகராக நடித்து வந்தேன். காமெடியனாக நடித்து மற்றவர்களை நடித்து வைத்த என்னுடைய குடும்பத்தில் சந்தோஷமே கிடையாது. எங்கள் குடும்பத்திலும் விரைவில் சந்தோஷம் வரும் என்று எதிர்பார்க்கிறேன்.

எங்களுக்கு ஒழுங்கான வீடுகூட கிடையாது. எங்கள் குடும்பத்தில் 3 பேர் ஊனமுற்றவர்கள் தான். நாங்கள் எங்களுடைய வாழ்விற்காக பிச்சை எடுக்கவில்லை எங்களின் சொந்த காலில் நிற்க வேண்டும் என்று நினைக்கிறோம். அரசாங்கமோ அல்லது ஏதாவது ஒரு தனியார் நிறுவனமோ எங்களுக்கு ஒரு நிரந்தர வேலை கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று கூறியுள்ளார் பரந்தாமன்.

hey