ஆழ்துளைக் கிணற்றில் வி ழுந்த தங்கை: முடியைப் பிடித்துக்கொண்டு க தறிய அக்கா! குவியும் பாராட்டுஆள்துளை கிணற்றில் விழுந்த தனது தங்கையை நொடிப்பொழுதில் விரைந்து செயல்பட்டு காப்பாற்றிய சகோதரிக்கு பாராட்டு குவிந்து வருகின்றது.சமீப காலமாக மூடப்படாத ஆள்துளை கிணற்றில் சிறுவர்கள் விழுவதும், பல போராட்டங்களுக்கு பின்பு உயிரிழப்பதும் நாம் அவதானித்து வருகின்றார்.எதிர்பாராத விதமாகவும், அதிர்ஷ்டவசமாகவும் சிலர் காப்பாற்றப்படுகின்றனர். இதே போன்று சிவகங்கை மாவட்டத்தில் சிறுமி ஒருவர் மயிரிழையில் தனது அக்காவின் உதவியால் உயிர் பிழைத்துள்ளார்.சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அடுத்து வெட்டுகாடு கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபு. இவருடைய மகள்களான தேவிஸ்ரீ (14) , ஹர்ஷினி( 9) ஆகிய இரு சிறுமிகளும் பள்ளிக்குச் சென்றுவிட்டு ஓய்வு நேரத்தில் ஆடுகளை மேய்ப்பது வழக்கம்.

வழக்கம்போல் பள்ளிக்கு சென்றுவிட்டு திரும்பிய 2 சிறுமிகளும் ஊர் நுழைவு வாயில் அருகே ஆடுகளை மேய்க்க சென்றுள்ளனர்,சிறுமிகள் இருவரும் வெவ்வேறு பகுதியில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தபோது, சிறுமி ஹர்ஷினி வேறு பக்கம் ஓடிய ஆட்டை வி ரட்டி சென்றுள்ளார்.அப்போது எதிர்பாராதவிதமாக ஆழ்துளை கிணற்றுக்காக தோண்டப்பட்டு சரிவர மூடப்படாத பள்ளத்தில் கால் பதித்த உடன் சிறிது சிறிதாக கு ழிக்குள் புதைய தொடங்கவும் அ லறியுள்ளார்.

தங்கையின் அலறல் சத்தம் கேட்ட தேவிஸ்ரீ ஓடிவந்து அவதானித்த போது, தங்கையின் நெற்றி வரை மூழ்கியநிலையில் இருந்ததை அவதானித்துள்ளார். உடனே சாதூர்யமாக செயல்பட்டு தங்கையின் தலைமுடியையும், வெளியே நீட் டிக் கொண்டிருந்த கையையும் விடாமல் வி டித்துள்ளார்.பின்பு வெளியே இருந்து உதவிக்கு ஆட்களை அழைத்து கதறிய தருணத்தில், அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் சேர்ந்து கா ப்பாற்றியுள்ளனர்.

ஓரளவிற்கு தங்கையை மற்றவர்கள் வரும் முன்னே கா ப்பாற்றியதோடு, சிறுமி தான் நின்ற இடத்தில் மட்டும் மணல் சரியாமல் இருந்ததால் இவ்வாறு தங்கையை காப்பாற்றியதாக கூறியுள்ளார்.இன்னும் பல கிராமஙகளில் தண்ணீருக்காக போடப்படும் ஆள்துளை கிணறுகள், போதிய அளவு தண்ணீர் கிடைக்காததால், அதனை பயன்படுத்தாமலும், அதனை மூ டாமலும் போட்டு வைத்து வருகின்றனர். இவ்வாறு அலட்சியம் இல்லாமல் துரி தமாக செயல்பட்டு மூ டப்படாத ஆள்துளை கி ணற்றினை மூடினால், அடுத்து உ யிர்கள் ப லியாகாமல் இருக்கும்.

hey