மைக்கேல் மதன காமராஜன் படத்தில் நடித்த பீம் பாய் என்னவானர் தெரியுமா ?தமிழ் சினிமா உலகில் இயக்குனர் சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில் 1991 ஆம் ஆண்டு திரை உலகிற்கு வெளி வந்த படம் தான் “மைக்கேல் மதன காமராஜன்”. படம் படத்தில் கமல்ஹாசன், ஊர்வசி, நாகேஷ், கிரேசி மோகன் உள்ளிட்ட பலர் நடித்து உள்ளார்கள். இந்த படத்திற்கு இளையராஜா அவர்கள் தான் இசை அமைத்து உள்ளார். இந்த படம் முழுக்க முழுக்க நகைச்சுவை திரைப் படம் ஆகும். இதில் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் நான்கு வேடத்தில் நடித்து உள்ளார். அதாவது திருடன் மைக்கேல், தொழிலதிபர் மதன கோபால், சமையல்காரன் காமேஷ்வரன் மற்றும் தீயணைப்பு வீரர் ராஜு என்று நான்கு வேடத்தில் நடித்து இருப்பது தான் இந்த படத்தின் சிறப்பு.

மேலும், இந்த படத்தில் பணக்கார கமலஹாசன் மதனுக்கு வேலைக் காரனாக நடித்தவர் தான் பீம் பாய். இவர் 1947 ஆம் ஆண்டு பஞ்சாபில் பிறந்தவர். இவருடைய ஆம் பெயர் பிரவீன் குமார் ஆகும். இவர் 1988 ஆம் ஆண்டு ஹிந்தியில் வெளியான ‘மகாபாரதம்’ என்ற தொடரில் பீமனாக நடித்து உள்ளார்.

இந்த தொடரில் மூலம் தான் இவர் மக்களிடையே பிரபலமாக பேசப்பட்டார். அதுமட்டும் இல்லாமல் இவர் வட்டெறிதல் விளையாட்டு வீரரும் ஆவார். இவர் 1967 ஆம் ஆண்டு நடந்த ஆசிய போட்டியில் இந்தியா சார்பில் விளையாடி தங்கப் பதக்கத்தையும் வென்று உள்ளார்.

பின் இவர் 1970 ஆம் ஆண்டு நடந்த போட்டியிலும் தங்கப் பதக்கத்தை வென்று இந்தியாவிற்கு மீண்டும் பெருமை சேர்த்தார். இதனை தொடர்ந்து இவர் காமன்வெல்த் போட்டிகளிலும் இதனை பல விருதுகளை பெற்று உள்ளார்.

இதனால் இவருக்கு அர்ஜுனா விருது வழங்கப்பட்டது. இவர் சுமார் 6.5 அடி உயரத்தில் இருந்த காரணத்தால் தான் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது என்று பேசுகிறார்கள். 1981 ஆம் ஆண்டு ஹிந்தியில் வெளியான ரட்சா என்ற படத்தில் நடித்து இருந்தார். அதற்கு பிறகு தான் இவருக்கு படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

மேலும், இவர் மேரி சபான், நாக பன்தி, அதிகார், மிட்டி ஆவூர் சோனா, டக் பங்களா, பன்னா என சினிமா உலகில் 50க்கும் மேற்பட்ட படங்களில் சினிமா உள்ளார். அதுமட்டும் இல்லாமல் இவர் பல சீரியல்களிலும் நடித்து உள்ளார்.

பின் இவர் 2013ம் ஆண்டு ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்தார். அதோடு அந்த கட்சி சார்பாக டெல்லி பஜ்ஜித்பூர் தொகுதியில் தேர்தலில் போட்டியிட்டார். ஆனால், தோற்று விட்டார். பின்னர் பிரவீன் குமார் ஓரிரு வருடங்கள் கழித்து பாஜாகா வில் இணைந்தார்.

hey