கோமாளி படத்தில் வரும் பஜ்ஜி கடை ஆன்டியா இது….? பார்த்தா கண்டிப்பா அதிர்ச்சியாகிடுவீங்கநடிகர் ஜெயம் ரவியின் வித்யாசமான நடிப்பில் 2019ல் வெளியான திரைப்படம் “கோமாளி”. 90களளில் பள்ளிப்படிப்பில் இருந்த மாணவனுக்கு திடீரென ஒரு வி பத்தில் கோமாவிற்கு சென்றுவிட்டு பிறகு 2019ல் நினைவு வந்தது போலவும்.அதற்கு இடைப்பட்ட காலத்தில் ஏற்பட்ட வாழ்வியில் மாற்றங்களை பார்த்து ஆச்சர்யப்படுவது அச்சப்படுவது என எல்லாவும் சிறப்பாக சேர்த்திருப்பார் இயக்குனர். படம் பார்த்த 90ஸ் கிட்ஸ் பலருக்கும் அவர்தம் பழைய நினைவுகள் வந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.இப்படத்தில் ஒரு பஜ்ஜிக்கடை நகைச்சுவை வரும். இப்படத்தின் தடம் மாறலுக்கு இந்த நகைச்சுவையும் ஒரு காரணம்.

தமிழில் தவிர்க்க முடியாத ஒரு இளம் நடிகராக வளம்வருபவர் ஜெயம் ரவி.இவர் தனது வித்தியாசமான கதைத்தேர்வால் ஒவ்வொரு படங்களும் மிக வித்தியாசமாக கொடுத்துவருகிறார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி ஹிட்டடித்த திரைப்படம் கோமாளி.

குறும்பட இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் தந்து முதல் திரைப்படமாக இந்த திரைப்படத்தை இயக்கியிருந்தார்.இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்திருந்தார்.16 ஆண்டுகளாக கோமாவில் இருந்தவர் திரும்ப வரும்போது நடக்கும் கூத்துக்களை செம காமெடியாக சொல்லியிருப்பார்.

விமர்சன ரீதியாக மட்டுமல்லாமல் வசூல் ரீதியாகவும் கோமாளி திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது.இந்த படத்தில் ஆரம்பத்தில் ஒரு பஜ்ஜிக்கடை காட்சி வரும். சொல்லப்போனால் இந்த காட்சிதான் ஜெயம் ரவி கோமாவிற்கு செல்வதற்கே காரணமாக அமையும்.

இந்த பஜ்ஜிக்கடை சீனில் நடித்திருந்தவர் கவிதா ராதேஷி.இவர் பாலிவுட் நடிகை ஆவார்.இவர் ஹிந்தியில் பல சீரியல்களில் நடித்துள்ளார்.ஹிந்தி பிக் பாஸின் 6வது சீசனில் கலந்துகொண்டார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு நல்ல புகழ் கிடைத்தது. தற்போது ஹிந்தி தவிர பிறமொழி திரைப்படங்களில் நடித்துவருகிறார்.தமிழில் கோமாளி திரைப்படம் தவிர்த்து கன்னடத்தில் ஒரு படத்தில் நடித்துவருகிறார்.இவர் தனது மாடர்ன் புகைப்படங்களை வெளியிட்டு அசத்திவருகிறார்.

hey