வவுனியா வடக்கு பிரதேச சபை பதில் செயலாளர் இ.தயாபரனுக்கு சேவை நலன் பாராட்டுவவுனியா நகரசபையின் செயலாளராகவும் வவுனியா வடக்கு பிரதேச சபையின் பதில் செயலாளராகவும் இராசையா தயாபரன் கடமையாற்றி வந்தார்.

இந்நிலையில் வவுனியா வடக்கு பிரதேச சபைக்கு புதிய செயலாளர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த 31.08.2021 அன்று பதில் செயலாளர் கடமையினை நிறுத்தி வவுனியா நகரசபையின் செயலாளராக மாத்திரம் கடமைகளை முன்னெடுத்து வருகின்றார்.

27.03.2021 தொடக்கம் 31.08.2021 வரை வவுனியா வடக்கு பிரதேச சபையில் பொதுமக்களுடனும் உத்தியோகத்தர்களுடனும் ஊழியர்களுடனும் பதவி என்பது உதவி செய்யும் கருவியே தவிர நமக்கு சூட்டப்பட்ட கிரீடம் அல்ல என்ற எண்ணத்துடன் பணியாற்றிய பதில்

செயலாளராக பணியாற்றிய இராசையா தயாபரன் அவர்களுக்கு பிரதேச சபை தவிசாளர் , செயலாளர் , உத்தியோத்தர்கள் , ஊழியர்களினால் மாலை அணிவித்து பொண்ணாடை போற்றி கௌரவித்ததுடன் நினைவு சின்னமும் வழங்கி வைக்கப்பட்டது.

hey