இலங்கையில் இவர்களுக்கும் இனி ஓய்வூதியம் : அரசாங்கம் விசேட அறிவித்தல்இலங்கையில் இவர்களுக்கும் இனி ஓய்வூதியம் : அரசாங்கம் விசேட அறிவித்தல்

விவசாயிகளுக்கான ஓய்வூதியம் மற்றும் மீனவர்களுக்கான ஓய்வூதியம் ஆகியவற்றை எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக விவசாய காப்புறுதி அதிகார சபையின் தலைவர் சட்டத்தரணி பிரேமசந்திர ஏபா தெரிவித்துள்ளார்.

விவசாய மற்றும் மீனவ ஓய்வூதியப் பெறுநர்கள் எதிர்வரும் 22 ஆம் திகதி தமக்கான தபாலகங்களுக்கு சென்று தமது ஒய்வூதியத்தை பெற்றுக் கொள்ள முடியும் என அவர் கூறியுள்ளார்.

விளம்பரத்திற்கு கீழே செய்திகள் தொடரும்

ஓய்வூதியத்தை செலுத்துவதற்கான நிதி எதிர்வரும் 20 ஆம் திகதி நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து தபாலகங்களுக்கும் அனுப்பிவைக்கப்படவுள்ளதாக விவசாய காப்புறுதி அதிகார சபையின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜுன் மாதத்திற்கான ஓய்வூதிய கொடுப்பனவிற்கே இந்த நிதி வழங்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

hey