இப்படியொரு டீச்சர் கிடைச்சா பள்ளிக்கூடமும் சொர்க்கம் தான் : இவுங்ககிட்ட படிக்குற பிள்ளைங்க குடுத்து வைச்சவங்கசிலபேர் பாடப்புத்தகத்தில் இருப்பதை அப்படியே மனப்பாடம் செய்துவந்து ஒப்பித்து பாடம் எடுப்பார்கள். ஆனால் சிலரோ அதில் இருந்து மாறுபட்டு, சில வித்யாசமான முறையை கடைபிடித்து பாடம் நடத்துவார்கள். இந்த ஆசிரியை அப்படித்தான் கொஞ்சம் வித்யாசமாக செய்து அசத்துகிறார்.பள்ளிக்கூடத்தில் நம்மை மெருகேற்றுவதில் ஆசிரிய, ஆசிரியைகளின் பங்கு மிக முக்கியமானது. அதிலும் சில டீச்சர்கள் எல்லாம் அமைந்துவிட்டால் நம் வாழ்வையே மாற்றிவிடுவார்கள். அப்ப்படியான ஒரு டீச்சரை பற்றிய செய்திதான் இதுபொதுவாகவே ஆசிரியர்களில் இரண்டுவகையினர் உண்டு.

சிலர் சம்பளத்திற்காக வேலைசெய்வார்கள். இன்னும் சிலரோ சம்பளத்தை ஒருபொருட்டாகவே எடுக்காமல் ஆத்மார்த்தமாக வேலை செய்வார்கள். இங்கே அப்படித்தான். ஒரு டீச்சர் இருக்கிறார். அவர் பணிசெய்வதோ ஒரு கிராமத்துப் பள்ளிக்கூடம்.

இப்போது கிராமங்கள் வரை பெப்ஸி, கோக் என பன்னாட்டுக் கம்பெனிகள் வந்துவிட்டன. இந்நிலையில் இங்கே இந்த டீச்சரம்மா தன் குழந்தைகளுக்கு அப்படி பன்னாட்டு

குளிர்பானங்கள் குடிப்பதை விடவும், பணம்கொடுத்து ஹார்லீக்ஸ், பூஸ்ட் என வாங்கிக் குடிப்பதை விடவும் நம் பாரம்பர்யத்திற்கு தனிப்பெருமை இருக்கிறது என விளக்குகிறார்.

கூடவே குழந்தைகளின் முன்பு நம் பார்ம்பர்ய பெருமை கொண்ட பானக்கம் செய்தும் காண்பிக்கிறார். இந்த பானக்கத்தில் விட்டமின் சி, கால்சியம், அயர்ன் ஆகியவை அதிகம் இருப்பதால்

இதன் மூலம் உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்கும் என அவர் தெளிவாக விளக்கவும் செய்கிறார். இதோ நீங்களே இந்த டீச்சரின் அழகான பேச்சைக் கேளுங்களேன்.

hey