பிரித்தானியா செல்லும் இலங்கையர்களுக்கான முக்கிய அறிவித்தல்கோவிட் அச்சுறுத்தல் தொடர்பான சிவப்பு பட்டியலில் இருந்து இலங்கையை நீக்கியுள்ள பிரித்தானியா, கடந்த 22ம் திகதி முதல் ஆபத்தான நாடுகளின் பட்டியலில் (Amber List) இணைந்துள்ளது.

இந்நிலையில், குறிப்பிட்ட திகதிக்கு முன்னர் இலங்கையை விட்டு வெளியேறிய பயணிகளுக்கும் சிவப்பு பட்டியல் விதிகள் பொருந்தும் என்று கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

இதன்படி, பயண ஆலோசனையை வழங்கியுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் தங்கள் நாட்டிற்குள் நுழையும் இலங்கை பயணிகளுக்கான வழிகாட்டுதல்களை பின்வருமாறு வகுத்துள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசியின் முழு அளவினை பெற்றவர்களாயின்…..

தேசிய அல்லது மாநில அளவிலான பொது சுகாதார அமைப்பிலிருந்து தடுப்பூசி சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டும்.
பிரித்தானிய செல்வதற்கு மூன்று நாட்களுக்கு முன் புறப்படுவதற்கு முன் கோவிட் -19 சோதனை செய்திருக்க வேண்டும்.
நீங்கள் பிரித்தானியாவிற்கு வந்த பிறகு செய்யப்படும் இரண்டு நாள் கோவிட் -19 சோதனைக்கு முன்பதிவு செய்தல் மற்றும் பணம் செலுத்துதல் வேண்டும்.

நீங்கள் பயணம் செய்வதற்கு முன் ஒரு பயணிகள் Locator படிவத்தை பூர்த்தி செய்யவேண்டும்.
உங்கள் ஆவணங்களின் நகல்களை பிரதியெடுத்து விமான நிறுவனங்கள் மற்றும் குடிவரவு அதிகாரிகளிம் காண்பிக்க வேண்டும்.
முழு தடுப்பூசி விதிகளின் கீழ் நீங்கள் தகுதி பெறதவர்களாயின்..

பிரித்தானியா செல்வதற்கு மூன்று நாட்களுக்கு முன் கோவிட் -19 பரிசோதனை செய்திருக்க வேண்டும்.
பிரித்தானியா வந்த பிறகு மேற்கொள்ளப்படும் 2வது நாள் மற்றும் 8 வது நாள் கோவிட் -19 சோதனைகளுக்கு முன்பதிவு செய்து பணம் செலுத்தியிருக்க வேண்டும்.

நீங்கள் பயணம் செய்வதற்கு முன் ஒரு பயணிகள் Locator படிவத்தை பூர்த்தி செய்யவேண்டும்.
உங்கள் ஆவணங்களின் நகல்களை பிரதியெடுத்து விமான நிறுவனங்கள் மற்றும் குடிவரவு அதிகாரிகளிம் காண்பிக்க வேண்டும்.
பிரித்தானியா வந்த பின்னர் உங்கள் வீட்டில் அல்லது நீங்கள் தங்கியிருக்கும் இடத்தில் 10 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும்.
பிரித்தானியாவிற்குள் நுழைவதற்கான அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகள்….

Oxford/ AstraZeneca, including COVISHIELD
Pfizer BioNTech
Moderna and Janssen from a relevant public health body
Other approved vaccine programs

hey