எப்போது திறக்கப்படும் பாடசாலைகள் – விரைவில் வரவுள்ள அறிவித்தல்?நாட்டில் கொரோனா தொற்று தீவிரமடைந்ததை அடுத்து பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

இந்த நிலையில் மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசியை செலுத்திய பின்னர் பாடசாலைகளை திறக்க முடிவு செய்யப்பட்டிருந்தது.

தற்போது பாடசாலைகளை மீளத்திறப்பது தொடர்பான பரிந்துரை மற்றும் வழிகாட்டல்கள் அடங்கிய அறிக்கை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தனவினால் கல்வி அமைச்சின் செயலாளரிடம் இன்று கையளிக்கப்பட்டுள்ளது.

மிகவிரைவில் பாடசாலைகளைத் திறப்பது குறித்த அறிவித்தல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

hey