நீண்ட இடைவெளிக்கு பின், 100க்கும் குறைவான கொவிட் மரணங்கள் : 12,000தை தாண்டிய கொவிட் உயிரிழப்புஇலங்கையில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12,000 தை தாண்டியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது.

இதன்படி, கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12,022ஆக அதிகரித்துள்ளது.மிக நீண்ட நாட்களுக்கு பின்னர், நாளொன்றில் பதிவாகும் கொவிட் உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 100க்கு குறைவாக நேற்று பதிவாகியது.

நேற்றைய தினம் 84 கொவிட் உயிரிழப்புக்கள் பதிவாகியதாக அரசாங்க தகவல் திணைக்கள் கூறுகின்றது.

இலங்கையில் நாளொன்றில் அதிகளவாக 216 பேர் உயிரிழந்தமை பதிவாகிய நிலையில், தற்போது உயிரிழப்புக்கள் பாரியளவில் குறைவடைந்துள்ளதை அவதானிக்க முடிகின்றது.

hey