இலங்கையில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் இல்லாத நிலையில் நாட்டின் தலைவர் யார் தெரியுமா?தற்போது இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ச இருவருமே வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர்.

இந்த நிலையில் தற்போது நாட்டில் தற்காலிக தலைவராக செயற்படவுள்ளவர் யார் என்பது தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.அதன்படி நாட்டின் தலைவராக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தற்காலிகமாக செயற்படவுள்ளார் என செய்திகள் தெரிவிக்கின்றன.

நியூயோர்க்கில் நடைபெறும் ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அமெரிக்கா பயணமாகியுள்ளார்.

இதற்கிடையே இத்தாலியில் ஜி 20 சர்வமத மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மகிந்த ராஜபக்ச சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

hey