வவுனியாவில் இயங்கிய லங்கா ரிப்போட் இணைய ஊடகவியலாளர்களுக்கு நடந்தது என்ன..? இதுவரை கிடைக்காத தீர்வு…!! அ ச்சுறுத்தலால் தவிக்கும் குடும்பம்ஊடகங்கள் மீதும் ஊடகவியலாளர்கள் மீதும் நாட்டில் இடம்பெறும் வன்முறைகளுக்கு குறைவில்லை. ஊடகவியலாளர்களுக்கு ஊடக சுதந்திரம் கிடைப்பது எமது நாட்டில் எப்போதும் சந்தேகமே.

அந்தவகையில் கடந்த வருடம் வவுனியாவில் இயங்கி வந்த ஊடகம் லங்கா ரிப்போட் இந்த இணையத்தின் உரிமையாளர் மற்றும் ஊடகவியலாளர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் விடுதலை செய்யப்பட்டனரா என்ற கேள்வி மக்களிடம் உருவாகியுள்ளது.

Lankareport உரிமையாளரும் அவருடன் பணிபுரிந்த ஊடகவியலாளரும் 21.01.2020 அன்று கைது செய்யப்பட்டனர். அதன் பின் ஊடகவியலாளர் லிவிராஜ் என்பவரை சில தினங்களில் விடுதலை செய்திருந்தனர்.

ஆனால் அவருடன் கைது செய்யப்பட்ட lankareport உரிமையாளர் கிருபன் என்பவர் இன்று வரை விடுதலை செய்யப்படவில்லை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவும் இல்லை. இந்த கைது நடவடிக்கையானது சட்டத்தின் பிரகாரம் நடைபெற்றதா என்ற கேள்வி உருவாகியுள்ளது.

கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்படாத கிருபன் இப்போது உயிருடன் உள்ளாரா..? இல்லையா..? என்பது கூட இன்றுவரை அவரின் குடும்பத்தினருக்கும் தெரியவில்லை. அவருடன் வேலை செய்த ஊடகவியலாளர் லிவிராஜ் விடுதலையின் பின் இராணுவம் மற்றும் பொலிஸாரின் தொடர் அச்சுறுத்தல் மற்றும் நெருக்கடியால் தலைமறைவானார்.

இவரின் தலைமறைவின் பின் இவரின் குடும்பத்தினரை வீட்டுச் சிறையில் வைத்ததைப்போல் அவர்களின் தேசிய அடையாள அட்டைகளை வாங்கிக் கொண்டு எங்கும் சென்று வர முடியாமல் தடுத்து வைத்துள்ளதுடன் தொடர் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளனர்.

இது தொடர்பில் ஆராய்ந்த ஊடக அமையம் வவுனியா மாவட்ட புலனாய்வுப் பிரிவினரிடம் வினவிய போது தாங்கள் யாரையும் கைது செய்யவும் இல்லை அப்படி யாரரையும் கைது செய்ததாக எமது பதிவேட்டிலும் இல்லை என தெரிவித்தனர்.

நாட்டில் சட்டம் சரியாக இயங்குகிறதா..? என்ற கேள்வியும். ஊடகவியலாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதும் உண்மையே… ஆனால் வெளி உலகிற்கு இலங்கை அரசு தாங்கள் சரியாக இருப்பதாகவே காண்பிக்கின்றது என்பதே நிதர்சனம்

hey