Saturday, May 18, 2024

இலங்கை இந்தியாவிற்கு இடையில் படகு சேவை ஆரம்பம்!

இந்தியாவின் நாகப்பட்டினத்தில் இருந்து காங்கேசன்துறை துறைமுகத்திற்கு இயக்கப்படும் பயணிகள் படகு சேவையானது வரும் 13 ஆம் திகதி முதல் மீண்டும் தொடங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த பயணிகள் கப்பல் சேவை 40 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மீண்டும் தொடங்கப்பட்ட நிலையில் பருவ மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.

இந் நிலையில், எதிர்வரும் 13ஆம் திகதி முதல் மீண்டும் சேவை ஆரம்பிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி கடந்த மே மாதம் 13ம் திகதி முதல் நவம்பர் 15ம் திகதி வரை நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து காங்கசன்துறைக்கு கடல் பயணத்திற்கான டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலம் தொடங்கப்பட்டுள்ளன.

ஒரு பயணத்திற்கு USD 50 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மற்றும் அனைத்து பயணிகளும் 60 கிலோ சாமான்களை இலவசமாக எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள்.

RELATED ARTICLES

Most Popular