இலங்கையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீடிப்பு குறித்து சற்றுமுன் வெளியான தகவல்நாட்டில் கோவிட் தொற்று தீவிரமடைந்த நிலையில் இலங்கையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டிருந்தது.

இந்த நிலையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கானது தொடர்ச்சியாக நீடிக்கப்பட்டு வந்த நிலையில் இறுதியாக எதிர்வரும் 21ஆம் திகதி அதிகாலை 4 மணிவரையில் நீடிக்கப்பட்டிருந்தது.

இவ்வாறான சூழ்நிலையில் இன்றைய தினம், மீண்டும் தனிமைப்படுத்தல் ஊரடங்கானது எதிர்வரும் முதலாம் திகதி அதாவது அக்டோபர் முதலாம் வரை நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை சுகாதார அமைச்சர கெஹெலிய ரம்புக்வெல டுவிட்டர் பக்கத்தில் இட்டுள்ள பதிவின் மூலம் அறிவித்துள்ளார்.

hey